வெ.இ கூட ஜெயிச்சது நிம்மதி.. ஆனா இனி இந்த தப்ப செஞ்சா எங்க கதை முடிஞ்சது – எய்டன் மார்க்ரம் பேட்டி

0
263
Markram

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு செல்வதற்கான முக்கிய போட்டியில் விளையாடினேன். இந்த போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணி 10 வருடங்கள் கழித்து அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பந்து பிச்சை தேர்ந்தெடுத்தார். ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று உணர்ந்து ஷம்சியை அணிக்குள் கொண்டு வந்ததோடு, தானும் நான்கு ஓவர்கள் பந்து வீசி அணிக்கு பெரிய உதவியாக இருந்தார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மணிக்கு ஷாய் ஹோப் கோல்டன் டக் ஆனார். அதிரடி வீரர் நிக்கோலஸ் பூர்ன் மார்க்ரம் ஓவரில் ஒரு ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். துவக்கமே அவர்களுக்கு மோசமாக அமைய சிக்கிக் கொண்டார்கள். ரோஸ்டன் சேஸ் மட்டும் அரை சதம் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் 135 ரன் எடுத்தது. இந்த இலக்கை 7 விக்கெட் மட்டும் இழந்து எடுத்து தென் ஆப்பிரிக்கா எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பின் பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று அரை இறுதிக்குள் வருவது பெரிய நிம்மதி. நாங்கள் உறுதியாக இருக்க விரும்பினோம். மழை வந்ததற்கு பிறகு விக்கெட் நன்றாக மாறியது. நாங்கள் ஆட்டத்தை சீக்கிரத்தில் முடிக்க முயற்சி செய்தோம். இதனால் நாங்கள் ஒரு டிரிக்கியான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டோம். ஆனால் இலக்கை அடைந்ததில் மகிழ்ச்சி.

நாங்கள் நிலைமைகளை மதிப்பிட்டு, சிறப்பாக பந்துவீசி அவர்களை சரியான ஸ்கோரில் வைத்தோம். பிறகு நாங்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி அதை கடக்க முடியும். ஆனால் இந்த விஷயத்தில் நாங்கள் இனியும் தவறு செய்யக் கூடாது. கற்றுக்கொண்டு சரியாக செயல்பட வேண்டும். வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஒரு கணிக்க முடியாத சுழல் பந்துவீச்சாளர் ஷம்சியை கொண்டு வர விரும்பினோம். பந்து நன்றாக திரும்பியது. எனவே நாங்கள் சுழல் பந்துவீச்சை அதிகம் வீசினோம்.

- Advertisement -

இதையும் படிங்க: எங்க முதுகை அந்த விஷயம் உடைச்சிடுச்சு.. இந்த ஒன்ன நான் மறக்க விரும்பறேன் – வெ.இ கேப்டன் ரோமன் பவல் பேச்சு

ஒருவேளை வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருந்திருந்தால். ரபாடா இன்று இரண்டு ஓவர் வீசியதற்கு பதிலாக முழு ஓவரையும் வீசி இருப்பார். நாங்கள் தற்போதைய நிலையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எங்களுடைய பௌலிங் யூனிட் நன்றாக செயல்படுகிறது. ஒரு பேட்டிங் யூனிட்டாக ஆட்டத்தை எப்போது எடுப்பது என்பது குறித்து நாங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நான் இன்று இதைச் சரியாக செய்யவில்லை. நாம் யாராக இருந்தாலும் சிறந்த முறையில் செயல்பட தொடங்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.