எங்க முதுகை அந்த விஷயம் உடைச்சிடுச்சு.. இந்த ஒன்ன நான் மறக்க விரும்பறேன் – வெ.இ கேப்டன் ரோமன் பவல் பேச்சு

0
442
Powell

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி வரும் என்கின்ற நிலை இருந்தது. சொந்த மண்ணில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோற்று வெளியேறிவிட்டது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசியது. ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன்களிடமிருந்து எதிர்பார்த்த பெரிய ரன்கள் வரவில்லை.

- Advertisement -

துவக்க ஆட்டக்காரர் கையில் மேயர்ஸ் 34 பந்தில் 35 ரன், ரோஸ்டன் சேஸ் 42 பந்தில் 52 ரன் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் ஷம்சி நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் விட்டுத் தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தனிப்பட்ட முறையில் யாரும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. ஸ்ப்ஸ் 27 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். கிளாசன் அதிரடியாக 10 பந்தில் 22 ரன் எடுத்து போட்டியை மாற்றினார். கடைசிவரை மார்க்கோ யான்சன் 14 பந்தில் 21 ரன் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் சோகமாக வெளியேறியது.

தோல்விக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் “இறுதிவரை போராடிய எங்கள் வீரர்களைப் பெருமையாக பார்க்கிறேன். ஒரு பேட்டிங் இன்று நாங்கள் செயல்பட்ட விதத்தை மறக்க விரும்புகிறேன். மிடில் ஓவர்களில் நாங்கள் நல்ல முறையில் பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தோம். இது எப்பொழுதும் பேட்டிங் அணியின் முதுகை உடைக்கிறது. எங்களுடைய வீரர்கள் 135 ரன்கள் பாதுகாக்க முடியும் என்று நினைத்தார்கள். தோற்று இருந்தாலும் இதை நான் பாராட்டுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க: கடைசி ஓவர் 5 ரன்.. 10 வருடம் கழித்து தெஆ செமி பைனலுக்கு தகுதி.. வெ.இ சோகமாக வெளியேறியது

நாங்கள் தற்போது உலகக் கோப்பையை வெல்லவில்லை, அரையிறுதிக்கு வரவில்லை ஆனால் கடந்த 12 மாதங்களில் நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் பற்றி ஆதரவாளர்கள் மத்தியில் சில சலசலப்புகள் இருக்கிறது. நாங்கள் இதை எடுத்துக் கொள்கிறோம். அதே சமயத்தில் எங்களுக்கு எல்லா இடங்களிலும் கிடைத்த ஆதரவு மற்றும் சமூக வலைதளங்களில் கிடைத்த ஆதரவு மிகவும் சிறப்பாக இருந்தது. இதற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.