சாம்சன் முடிவு பண்ணிட்டா அவரை தடுக்க முடியாது.. ஒரு விஷயம் தோத்தாலும் பெருமைதான் – எய்டன் மார்க்ரம் கருத்து

0
1092
Markram

இன்று இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தது. போட்டிக்கு பிறகு அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அந்த தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி வீழ்த்தி இருந்தது. இப்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. எனவே உள்நாட்டில் வைத்து உலகக்கோப்பை தோல்விக்கு தென் ஆப்பிரிக்கா அணி பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்

இன்று டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்ந்தெடுக்காமல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வந்த சஞ்சு samsung 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 107 ரன்கள் குவித்தார். இவரை தவிர இந்திய அணியில் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி இன்னும் இருபது ரன்கள் கூடுதலாக எடுக்கும் நிலையில் இருந்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் கடைசியில் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்கள். இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

சாம்சனை தடுப்பது கடினம்

இந்தத் தோல்வி குறித்து எய்டன் மார்க்ரம் கூறும்பொழுது ” டாஸ் வென்று எடுத்த முடிவு பிரச்சனை கிடையாது. ஏனென்றால் இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியான சாதகம்தான் இருந்தது. புதிய பந்தில் சிறப்பாக இருந்தது பந்து தேய்ந்ததும் கொஞ்சம் விளையாட சுலபமாக இருந்தது. சாம்சன் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடினார் எங்கள் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். அவரை வீழ்த்துவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிப்பது முன்னோக்கி செல்ல எங்களுக்கு உதவும்”

இதையும் படிங்க : இனி என் முடிவு இதுதான்.. நாங்க டீம்ல இதைத்தான் பேசி வைத்தோம் – சஞ்சு சாம்சன் பேட்டி

“மேலும் சாம்சன் இந்த மாதிரி அதிரடியாக அடிக்கும் பொழுது அவரை தடுப்பது மிகவும் கடினம். நீங்கள் அவருக்கான கிரெடிட்டை கொடுக்க வேண்டும்.அதே சமயத்தில் இன்று இரவு கடைசிக்கட்ட ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதத்திற்கு நான் பெருமை அடைகிறேன். இது பாசிட்டிவான விஷயமாக அமைந்திருக்கிறது. கோட்சி மற்றும் யான்சன் சிறப்பாக செயல்பட்டார்கள். மற்ற வீரர்களும் இன்றைய போட்டியில் இருந்து எதை மேம்படுத்த வேண்டும் என்பதை கற்று இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -