தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடி சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் இன்று தன்னுடைய பேட்டிங் குறித்து பேசி இருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி இருக்கிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபாரமான முறையில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டாவது சதம்
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்தத் தொடரிலும் துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் முத்தம் 50 பந்துகள் சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் எடுத்தார். இன்று ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடுவதே அவருடைய நோக்கமாக இருந்தது.
இன்று அடித்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையையும் படைத்தார். கடைசியாக இந்தியாவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலநேரம் பலன் தரும் சிலநேரம் தராது
இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூறும் “விளையாடும் நேரத்தை மிகவும் ரசிக்கிறேன். நான் நன்றாக விளையாடி வருகின்ற காரணத்தினால் என் பார்மை பயன்படுத்த விரும்பினேன். இண்டெண்ட் காட்டி விளையாடுவது தான் சரியாக இருக்கிறது. நம்மை முன்னிலைப்படுத்துவதை விட அணியை முன்னிலைப்படுத்தி விளையாட வேண்டும் என்று நாங்கள் அணியில் பேசி வருகிறோம்.முதல் இரண்டு பந்துகளை விளையாடியதுமே பவுண்டரியை தேட ஆரம்பிக்கிறோம்”
இதையும் படிங்க : 8 ஓவர் 6 விக்கெட்.. வருண் சக்கரவர்த்தி பிஸ்னாய் மேஜிக் பவுலிங்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
“இப்படி விளையாடுவது விஷயங்களை எளிதாக மாற்றுகிறது. ஆனால் இது சில நேரம் பலன் தருகிறது சில நேரம் பலன் தராது. இன்று பலன் தந்து எங்கள் வழியில் சென்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தென் ஆப்பிரிக்கா அணியினர் தங்களது சொந்த சூழ்நிலையில் விளையாடுகின்ற காரணத்தினால் முன்னிலையில் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே நாங்கள் வெற்றியுடன் தொடங்குவது முக்கியமானதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






