இந்திய அணி எதை நம்பி இருக்கோ.. அதற்கு தகுந்த வீரர்கள் எங்களிடம் இருக்காங்க – தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் பேட்டி

0
556

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் மார்கோ ஜான்சன் இந்திய அணிக்கு எதிராக துபாயில் விளையாடுவது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு சாதகம்

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்ததை அடுத்து, இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டு துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஒரே மைதானத்திலேயே லீக் போட்டிகள் மற்றும் நாக் அவுட் போட்டிகள் விளையாடும் நிலையில் இது இந்திய அணிக்கு ஒரே மைதானம், ஒரே சூழல் என நன்மை அளிக்கக் கூடிய பல விஷயங்கள் இருப்பதாக முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேர்மையற்ற நிலை இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். மேலும் இந்திய அணி துபாயில் வேறு வேறு மைதானங்களில் விளையாடி இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிராக அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடினால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், சுழற் பந்து வீச்சை திறம்பட சமாளிக்க கூடிய வீரர்கள் தங்களது அணியில் இருப்பதாக தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் மேர்கோ ஜான்சன் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

எந்தக் கவலையும் இல்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் இந்திய அணிக்கு எதிராக துபாயில் விளையாடினால், எங்களை விட இந்திய அணி அந்த மைதானத்தில் அதிக அனுபவம் மற்றும் பயிற்சி பெற்றதாக இருக்கும். அதனால் அவர்கள் அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகளுக்கு அதிகமாக பழகுவார்கள். ஆனால் நாங்கள் துபாய் மைதானத்திலும் விளையாடியிருக்கிறோம். இந்த மைதானம் எங்களுக்கு புதிதாக இருக்கப் போவதில்லை.

இதையும் படிங்க:விளம்பரத்துக்காக ரோஹித் ஒருபோதும் இதை செய்ய மாட்டார்.. எனக்கு நல்லா தெரியும் – அமித் மிஸ்ரா பேட்டி

அதனால் அது அவ்வளவு பெரியதாகவோ அல்லது அதிக நன்மை அளிக்கக்கூடிய விஷயமாகவோ நான் நினைக்கவில்லை. அந்த நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை பொருத்துதான் அனைத்து விஷயங்களும் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன்” என்று மார்க்கோ ஜான்சன் கூறியிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது அரை இறுதி ஆட்டத்தில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -