இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இழந்ததால் கடும் நெருக்கடியில் இருக்கிறது. இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை சிறப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தற்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணிகள் இல்லாத காரணத்தினால் எட்டாவது இடம் வரைக்கும் பேட்டிங்கை எடுத்துச் சென்றால், இந்திய வேகப்பந்து வீச்சு யூனிட்டில் இரண்டு பவுலர்கள் மட்டுமே இடம் பெற முடியும் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக கம்பீர் என்ன முடிவு செய்வார்? என்கின்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஹர்ஷித் ராணாவை வைத்து, அர்ஸ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ரவீந்தர ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்திய அணியின் பௌலிங் யூனிட் 6 பந்துவீச்சாளர்களுடன் வலிமையாக இருக்கிறது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா உடன் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் களம் இறங்குவார் என்பது தெரிந்த விஷயமாக இருந்தது. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் இருந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க இருக்கிறார்.
அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால் கம்பீர் இந்த முறை மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை ருதுராஜுக்கு கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க: ஆண்ட்ரே ரசல் அதிரடி முடிவு.. சிஎஸ்கே கனவில் விழுந்த மண்.. பெருமையை காப்பாற்றிய கரீபியன்
இந்திய பிளேயிங் XI : ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ், வாஷிங்டன் சுந்தர், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா.