ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல வருடங்களாக விளையாடி வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் அதிரடி முடிவு ஒன்றை இன்று அறிவித்திருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் மட்டும் இல்லாமல் கரீபியன் தொடரிலும் ரசல் மிக முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முகமாக இருக்கிறார்.
வெளியே விட்ட கொல்கத்தா
கடந்த வருடம் 12 கோடி ரூபாய்க்கு ஆண்ட்ரே ரசலை கொல்கத்தா அணி நிர்வாகம் தக்க வைத்திருந்தது. இந்த நிலையில் இந்த முறை அவரை வெளியே விட்டது. எனவே அவர் ஏலத்திற்கு வந்தால் சிஎஸ்கே வாங்குவதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருந்தது. எனவே சிஎஸ்கே அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
இந்த நிலையில் தான் ஆண்ட்ரே ரசல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். பேட்டிங்கில் பவர் கோச்சாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செயல்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு தற்போது ரசல் கிடைக்க மாட்டார். அதே சமயத்தில் கேமரூன் கிரீன் ஏலத்திற்கு வந்தால் அதிக பணம் வைத்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் வாங்கும். தற்போது இது சிஎஸ்கே அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் கவலை அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது.
கரீபியன் வீரர்களின் பெருமை
வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரசல் 2012 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார். இவர் 174 ஸ்ட்ரைக் ரேட்டில் 12 அரைசதங்களுடன் 2681 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் பந்துவீச்சில் 123 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க : கம்பீர் அகர்கர் கண்ணாடிய பாருங்க.. பேட்ஸ்மேன்களை வாழ விடுங்க.. இதுதான் வழி – ஹர்பஜன் சிங் அறிவுரை
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி அந்த அணியின் அடையாள வீரராக மாறிய கரீபியன் வீரர் கீரன் பொல்லார்டை மும்பை இந்தியன்ஸ் அணி கழட்டிவிட்ட பிறகு அவர் எந்த அணிக்கும் செல்லவில்லை. உடனடியாக ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக மாறினார். அதுபோலவே தற்போது இன்னொரு கரீபியன் வீரர் ரசல் கொல்கத்தா அணி கழட்டிவிட்டதும் உடனடியாக ஓய்வை அறிவித்து அதே அணிக்கு பயிற்சியாளராக மாறுகிறார்.






