உலக கிரிக்கெட்

273 ரன் வித்தியாசம்.. பங்களாதேஷ் அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.. இந்திய அணிக்கு கடும் நெருக்கடி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

பிரமாண்ட முதல் இன்னிங்ஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டோனி டி சோர்ஸி 177 மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்கள் என இரண்டு பேர் இரண்டு சதங்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி 159 ரன்கள் எடுத்து சுருண்டது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரபாடா ஐந்து விக்கெட் கைப்பற்றினார். மேலும் பங்களாதேஷ் அணி ஃபாலோ ஆன் ஆக தொடர்ந்து அந்த அணியை தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய வைத்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு கடும் நெருக்கடி

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி மீண்டும் முதல் இன்னிங்ஸை விட மோசமாக விளையாடி 143 ரன்களில் சுருண்டது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் இந்த முறை கேசவ் மகாராஜ் 5, சேனோரன் முத்துசாமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இதையும் படிங்க : ஆஸி ஏ டெஸ்ட்.. வெறும் 107 ரன்.. கேப்டன் ருதுராஜ் கோல்டன் டக்.. சுருண்ட இந்திய அணி.. ஆரம்பமே பரிதாபம்

தற்போது தென் ஆப்பிரிக்கா அன்னைக்கு சொந்த நாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் கொண்ட இரண்டு டெஸ்ட் தொடர்கள் இருக்கிறது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்றால் தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு பெரிய பின்னடைவு உருவாகி இருக்கிறது!

- Advertisement -
Published by