இந்திய கிரிக்கெட்

ருதுராஜுக்கு 2 முறை நடந்த சோகம்.. இது பழைய தென் ஆப்பிரிக்கா.. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் தற்போது தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டி இன்று சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

விராட் கோலி ருதுராஜ் அபாரம்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 14, ஜெய்ஸ்வால் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி 93 பந்துகளில் 102 ரன்கள், ருதுராஜ் 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார்கள்.

இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் கேஎல்.ராகுல் ஆட்டம் இழக்காமல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க பரப்பில் மார்கோ யான்சென் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா வரலாற்று வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் 98 பந்துகளில் 110 ரன், கேப்டன் டெம்பா பவுமா 48 பந்துகளில் 46 ரன், பிரிட்ஸ்கீ 64 பந்துகளில் 68 ரன், டிவால்ட் பிரிவிஸ் 34 பந்துகளில் 54 ரன் எடுத்தார்கள். இறுதிக்கட்டத்தில் கார்பின் போஸ் ஆட்டம் இழக்காமல் 15 பந்தில் 26 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : விராட் கோலி கிட்ட பார்த்தா இப்ப ஒரு விஷயம் தெளிவா தெரியும்.. இந்த மாற்றத்தை பண்ணி இருக்காரு – ஜாகீர் கான் பேச்சு

மேலும் இது ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிகபட்ச துரத்தலாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் இதே 359 ரன்களை துரத்தி இருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் மற்றும் லோயர் ஆர்டர் மிகவும் வலிமையாக இருப்பது அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. மேலும் போட்டியில் இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு இருந்தது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் ருதுராஜ் சதம் அடித்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை அடைந்திருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts