இன்று தென் ஆப்ரிக்க அணி க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டாவது சதத்தை விராட் கோலி அடித்திருக்கிறார். தற்போது அவரது பேட்டிங் அணுகு முறையில் என்ன மாற்றம் செய்திருக்கிறார் என்பது குறித்து ஜாகிர் கான் பேசியிருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. இன்று இரண்டாவது போட்டியிலும் சதம் அடித்திருக்கிறார்.
விராட் கோலியின் அணுகுமுறை
இன்று விராட் கோலி தன்னுடைய ரன் கணக்கை புல் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்து ஆரம்பித்தார். அடுத்து மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார். பொதுவாக மெதுவாக ஆரம்பிக்கும் பழக்கம் கொண்ட விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளாக சிக்ஸர்கள் அடிப்பதில் கவனமாக இருக்கிறார்.
கடந்த போட்டியில் மட்டும் விராட் கோலி 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார். முன்பு ஒரு முனையில் யாரையாவது அதிரடியாக ஆடவிட்டு விராட் கோலி கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்வார். ஆனால் இப்போது இந்த அணுகுமுறையை மாற்றிக் கொண்டிருக்கிறார். இன்று ஒரு முனையில் ருதராஜ் அதிரடியாக விளையாடியபோதும் விராட் கோலி அதிரடியாக விளையாடவே செய்தார்.
விராட் கோலியின் மாற்றங்கள்
இது குறித்து பேசி இருக்கும் ஜாகீர் கான் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் ருதுராஜ் இருவரின் பார்ட்னர்ஷிப் மிகவும் தனித்துவமானது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதே சமயத்தில் இந்த போட்டியில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்துக் கொண்டு பார்த்தால், அது முக்கியமாக பேசப்படும் விஷயமாக இருக்கப் போகிறது”
இதையும் படிங்க : நீ இருணா நான் பாத்துக்கிறேன்.. விராட்டை வைத்துக்கொண்டு ருதுராஜ் செய்த சம்பவம் – களத்தில் என்ன நடந்தது?
“ஏனென்றால் இதை கவனிப்பதன் மூலம் அவர் எடுத்ததுமே அதிரடியாக விளையாட முடிவு செய்துவிட்டார் என்று புரிந்து கொள்ளலாம். அவர் விளையாட உள்ளே வந்ததும் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள பயப்படவில்லை. இந்த கட்டத்தில் அவருக்கு இது ஒரு சிறந்த அறிகுறியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






