“தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம்.. இந்திய அணி எந்த தொடரையும் ஜெயிக்காது!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

0
654
ICT

இந்திய அணி சூரியகுமார் தலைமையில் உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த மூன்று நாட்களில் துவங்கிய இந்தத் தொடரில், இந்திய அணி வெற்றி பெற்றது சிறப்பானது.

இதற்கடுத்து தற்பொழுது மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

- Advertisement -

இந்த மூன்று தொடர்களிலும் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. டி20 இந்திய அணிக்கு சூரிய குமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். முதல் போட்டி வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதியும் துவங்கின்றன. ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு கேஎல்.ராகுல், டெஸ்ட் இந்தியா அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட இருக்கிறார்கள்.

கடந்த முறை இந்திய அணி 2021 ஆம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்தது. இதில் இரண்டு தொடர்களைமே இந்திய அணி இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணம் குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா “நான் இந்த சுற்றுப்பயணத்தில் இயங்கும் ஒரு கிளீன் ஸ்வீப்பை பார்க்கவில்லை. நாம் இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு சிறந்த அணியாக இல்லை. அவர்களும் மிகச்சிறந்த அணி கிடையாதுதான். ஆனால் அவர்களுக்கு சொந்த நிலைமைகள் சாதகமாக இருக்கும். அவர்களுக்கு பக்கத்தில் ஒரு நல்ல உலகக்கோப்பை இருந்தது.

இந்த முழு தொடரிலுமே நான் தென் ஆப்பிரிக்காவை பேவரைட் ஆக பார்க்கிறேன். நான் சொல்வது தவறாகப் கூட போகலாம். ஆனால் சில போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக மாறுவதை நான் பார்க்கிறேன். ஒட்டுமொத்தமாக மூன்று தொடர்களிலும் நடக்கும் எட்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் வெல்லும்!” என்று கூறியிருக்கிறார்!