தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கின் முதல் சாம்பியன் சன்ரைசர்ஸ் ; இறுதிப்போட்டி முழு விபரம் உள்ளே!

0
1245
T20

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடரின் வெற்றியை அடுத்து உலகில் பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தனியாக டி20 தொடரை நடத்தி வருகின்றன!

இதில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஒரு படி மேலே போய் ஐபிஎல் அணிகளை வாங்கி உள்ள முதலாளிகளை வைத்து தங்கள் நாட்டின் டி20 தொடருக்கான ஆறு அணிகளை அவர்களுக்கு விற்று தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை நடத்தி வருகிறது!

- Advertisement -

ஐபிஎல் அணிகளான சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான், லக்னோ ஆகிய 6 அணிகள் தென் ஆப்பிரிக்க தொடரில் அணிகளை வாங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

ஜனவரி பத்தாம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த டி20 தொடரில்,
பிரட்டோரியா கேப்பிட்டல்ஸ், பியர்ல் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன!

முதல் அரை இறுதியில் பிரட்டோரியா கேப்பிட்டல், பியர்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரை இறுதியில் இன்று சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இன்று வெயின் பர்னல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கும், எய்டன் மார்க்கம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கும் இடையே நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்று சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வாண் டெர் மெர்வ் அபாரமாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே தந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, பிரிட்டோரியா கேப்பிட்டல் அணி 19.3 ஓவர்களில் 135 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

இதற்கு அடுத்த களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ரோஸிங்டன் அபாரமான துவக்கம் தந்து அதிரடியில் மிரட்டினார். இவர் 30 பந்துகளில் 57 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 26 ரண்களும் எடுத்து வெளியேற, ஆட்டத்தில் ஒரு திடீர் பரபரப்பு ஏற்பட்டது ஆனால் பதினாறாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி மார்க்கோ யான்சன் இலக்கை எட்டி அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் புதிய தென்னாப்பிரிக்க டி20 லீகின் முதல் சாம்பியன் ஆக சன்ரைசர்ஸ் அணி உருவெடுத்துள்ளது!