வெஸ்ட் இண்டீஸ் டி20.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. பும்ராவுக்கு சவால் விட்ட 18 வயது வீரர் அறிமுகம்

0
746
Maphaka

தற்போது சவுத் ஆப்பிரிக்கா ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டிஸ்க்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மட்டும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடி டிரா செய்திருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாளை முதல் இருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டி இந்த மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை துவங்குகிறது. இதற்கு அடுத்து உடனே 25 ஆம் தேதி இரண்டாவது போட்டியும் மூன்றாவது போட்டியில் 28ஆம் தேதியும் நடந்து தொடர் முடிவுக்கு வருகிறது.

இன்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக தொடர்கிறார். மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ககிசோ ரபாடா, மார்க்கோ யான்சன் மற்றும் அன்ரிச் நோர்க்கியா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மேலும் தென் ஆப்பிரிக்க 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சு சூப்பர் ஸ்டார் க்வேனா மபாகா மற்றும் மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஜேசன் ஸ்மித் இருவரும் தென் ஆப்பிரிக்க அணிக்காக முதன்முறையாக அறிமுகமாகிறார்கள். இதில் க்வேனா மபாகா பும்ராவை விட பெரிய பவுலராக வருவேன் என்று சவால் விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நம்பர் 2 இடத்தை தட்டி தூக்கிய ரோகித் சர்மா.. முதல் 4 இடத்தில் 3 இந்திய வீரர்கள்.. புதிய ஐசிசி ODI ரேங்கிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி:

எய்டன் மார்க்ராம், ஒட்னீல் பார்ட்மேன், நண்ட்ரே பர்கர், டோனோவன் ஃபெரீரா, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி நிகிடி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், க்வேனா மபாகா, வியான் முல்டர், ரியான் ரிக்கெல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ராஸி வான்டர் டெஸன்.

- Advertisement -