நம்பர் 2 இடத்தை தட்டி தூக்கிய ரோகித் சர்மா.. முதல் 4 இடத்தில் 3 இந்திய வீரர்கள்.. புதிய ஐசிசி ODI ரேங்கிங்

0
1755

ஐசிசி ஒரு நாள் தரவரிசைக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் டாப் ஐந்து இடங்களுக்குள் இந்தியாவின் மூன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் மூலமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் தர வரிசை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் நம்பர் ஒன் தரவரிசையில் இருக்கும் பாகிஸ்தான் வீரருக்கும் ரோஹித் சர்மாவினால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது ஐசிசி ஒரு நாள் போட்டி தொடருக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்திருந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு மூன்று போட்டிகளிலும் சேர்த்து 157 ரன்கள் குவித்ததோடு சராசரியாக 52.33 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விதமாக 141.44 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மூன்றாவது வரிசையில் இருந்த ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருந்த துணை கேப்டன் சுப்மான் கில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மூன்று ஆட்டங்களிலும் விளையாடி 58 ரன்கள் மட்டும் குவித்த விராட் கோலி நான்காவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். 5வது இடத்தில் அயர்லாந்து அணியின் ஹாரி டக்டர் இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பாபர் அசாம் 824 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு பின்னால் இரண்டாவது இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மா 765 புள்ளிகளோடு இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் கில் 763 புள்ளிகளோடு மூன்றாவது இடத்திலும், 746 புள்ளிகளோடு விராட் கோலி நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். இதில் இந்திய அணி வீரர்கள் மூன்று பேர் டாப் 5 இடங்களுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் அசாமை விட ரோஹித் சர்மா 59 புள்ளிகள் மட்டும் பின்தங்கி இருக்கிறார். இனி அடுத்து வரும் தொடர்களில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பாபர் அசாமை முந்தி நம்பர் ஒன் இடத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. மேலும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நான்காவது இடத்தில் இருக்கிறார். முதல் மூன்று இடங்களில் கேசவ் மகாராஜ், ஹெசில் வுட், ஆடம் ஜம்பா ஆகியோர் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:10 வருஷமா கோப்பைல கை வைக்கல .. அந்த 2 சம்பவம் நினைவிருக்கா? – பாண்டிங்க்கு ரவி சாஸ்திரி பதிலடி

இதில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத பட்சத்தில் தற்போது தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். மறுபுறத்தில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஐந்து இடங்கள் சரிந்து தற்போது பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் அக்சார் பட்டேல் ஆறு இடங்கள் முன்னேறி 83வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -