தென் ஆப்பிரிக்கா ODI.. 16 பேர் கொண்ட இந்திய அணி.. கில் ரோகித் இல்லை.. சாய் சுதர்சன் விளையாடுவாரா?

0
5783
ICT

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்திருக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி கேஎல்.ராகுல் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பாக இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெறவில்லை. மேலும் கில்லுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

அதே சமயத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியா காயத்தின் காரணமாக இந்தச் சுற்றுப்பயணத்தின் மொத்தத்திலும் இடம்பெறவில்லை.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் துவக்க இடத்திற்கான வீரர்களாக ருதுராஜ், சாய் சுதர்சன் மட்டுமே இருக்கிறார்கள். எனவே சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே விளையாட வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

அதேபோல் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் ரஜத் பட்டிதாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ருதுராஜ், சாய் சுதர்சன், ஸ்ரேயா ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் நால்வரும் இடம் பெறுவது உறுதி என்பதாகத் தெரிகிறது. ஏழாவது இடத்தில் அக்சர் படேல் வருவார்.

எனவே பேட்டிங் யூனிட்டில் மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு திலக் வர்மா, ரிங்கு சிங், ரஜத் பட்டிதார் மற்றும் சஞ்சு சாம்சன் என நான்கு பேர் இருக்கிறார்கள். இவர்களில் விளையாடுவதற்கு யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பதே சுவாரசியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கே), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹர்.