258 ரன்களை சேஸ் செய்து மாஸ் காட்டி டி20யில் உலகச்சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!

0
4372
Wi vs Sa

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி , நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரை சமன் செய்து அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றுது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி , முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓபனர்களான பிராண்டன் கிங் மற்றும் கையில் மேயர்ஸ் தங்களது மட்டையை சுழற்ற ஆரம்பித்தார்கள். வந்த வேகத்தில் பிராண்டன் கிங் அவுட் ஆகி வெளியேறினார் . இதனை தொடர்ந்து ஒன் டவுன் இறங்கினார் , அதிரடி ஆட்டக்காரர் சார்லஸ் . வந்த வேகத்தில் தனது மட்டையை சரமாரியாக சுழற்றினார். இதற்கு கை மேல் பலனாக குறைந்த பந்தில் 50 ரன்கள் கடந்தார். தான் சந்தித்த 39 வது பந்தில் நூறு ரன்களை எட்டினார்.

- Advertisement -

இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் , தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியில் 45 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது . அதனை இன்று சார்லஸ் முறியடித்தார் . இதன் மூலம் வேகமாக சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் பெற்றார். இதற்கு முன் தென்னாபிரிக்கா அணியின் டேவிட் மில்லர் மற்றும் இந்தியாவின் ரோகித் சர்மா, இந்த சாதனையை செய்திருந்தனர். தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 258 ரன்கள் எடுத்து தனது இன்னிங்ஸை முடித்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய ஆப்பிரிக்கா அணியின் ஓப்பனர்களான ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் டிகாக் வந்த வேகத்தில் தங்களது மட்டையினை மிகவும் வேகமாக சுழற்றினார்கள் .இதனால் தென் ஆப்பிரிக்கா அணி ஆறு ஓவர்களில் 100 எண்களை கடந்தது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிகாக் 15 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் 50 ரன்கள் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் இந்திய அணியின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்தது சாதனையாக இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணியின் மட்டையாளர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை கொடுக்க 258 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை வெற்றிகரமாக கடந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரில் அதிக ரண்களை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையை தென்னாபிரிக்கா அணி பெற்றுள்ளது .

- Advertisement -

இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்த அணி நிர்ணயித்த 243 ரண்களை ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெடுகள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது.