சர்வதேச போட்டிகள் 0.. அறிமுக வீரருக்கு கேப்டன் பதவி.. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அதிரடி முடிவு.. காரணம் என்ன.?

0
10163

தென்னாபிரிக்க அணி தற்போது இந்தியாவுடன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள தென்னாபிரிக்க அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஜனவரி 3ஆம் தேதி எதிர்கொள்கிறது.

அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. ஆனால் அதற்காக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணி தான் அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் போன்று சிஎஸ்ஏ எனப்படும் உள்நாட்டு தொடரின் இரண்டாவது சீசனை நடத்த இருக்கிறது.

- Advertisement -

இதில் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான மார்க்கம், ரபாடா மற்றும் ஜான்சன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதால் எஞ்சிய வீரர்களைக் கொண்டு சர்வதேச போட்டியில் அனுபவமே இல்லாத ஒரு வீரரைக் கேப்டனாக அறிவித்துள்ளது. நீல் பிராண்ட் எனப்படும் 27 வயதான கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகாத நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

51 முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு. அதில் 2906 ரன்கள் குவித்ததுடன் பேட்டிங் சராசரி 39.27 ஆகும். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 72 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். எனினும் கடந்த 50 வருட கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே கேப்டனாக செயல்படும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை நீல் பிரான்ட் படைக்க உள்ளார்.

இதற்கு முன்னர் 1995இல் நியூசிலாந்து அணியின் லீ ஜெர்மன் தனது அறிமுக போட்டியிலேயே கேப்டனாக களம் இறங்கி இருந்தார். அதற்குப் பின்னர் தற்போது நீல் பிராண்ட் கேப்டனாக அறிமுகமாக உள்ளார். உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் பணத்திற்காக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இப்படி ஒரு செயலை செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வலம் வருகிறது.

- Advertisement -

தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைமை பெயர்ச்சியாளர் சுக்ரீ கான்ராட் கூறுகையில்
” நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்கும் வீரர்களை நான் வாழ்த்துகிறேன். நியூசிலாந்து அணியை தோற்கடிப்பதற்கான அனைத்து தகுதிகளும் தென்னாபிரிக்க அணியிடம் உண்டு.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றனர். அந்த அனுபவம் இவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்” என்று கூறி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம் :

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:

நீல் பிராண்ட் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ருவான் டி ஸ்வார்ட், க்ளைட் ஃபோர்டுயின், ஜுபைர் ஹம்சா, ட்ஷெபோ மோரேகி, மிஹ்லலி ம்பொங்வானா, டுவான் ஆலிவியர், டேன் பேட்டர்சன், கீகன் பீட்டர்சன், டேன் பீட், ரெய்னார்ட் வான் டோண்டர், ஷான் வான் பெர்க் மற்றும் கயா சோண்டோ.