WTC பைனல்.. இந்தியா ஆஸி அணிகளுக்கு வந்த புது நெருக்கடி.. தென் ஆப்பிரிக்க கோச் சவால்.. மாறும் நிலைமைகள்

0
1042
Conrad

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தங்கள் அணிக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது வெஸ்ட் இண்டிஸ் நாட்டிற்கு தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை டிரா செய்து இரண்டாவது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, ஐசிசி உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்க அணி என்கின்ற சிறப்பை பெற்றது.

மேலும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் மூத்த வீரர்கள் விலகலுக்கு பின்னால் இளம் வீரர்களைக் கொண்டு டெஸ்ட் அணியை உருவாக்கிக் கொண்டு வருவதற்கு அடிப்படைகளை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தங்கள் அணியாலும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் அடுத்து வரும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றால் எங்களால் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இதன் முடிவில் எங்காவது நல்ல வாய்ப்பில் இருக்கலாம் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.ஆனால் எங்களுடைய குறிக்கோள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மட்டும் கிடையாது. இளம் வீரர்களைக் கொண்ட அணியை சிறப்பாக முன்னேற்றுவது ஆகும்.

கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களுக்கும் உலகக் கோப்பைத் தொடர் இருக்கும் பொழுது, டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கும் உலகக்கோப்பை தொடர் இருப்பது நல்ல விஷயம்.

இதையும் படிங்க : ரோகித் எதை மறந்தாலும் அதை மறக்க மாட்டார்.. அந்த விஷயத்துல அவர மாதிரி பாக்கவே இல்ல – இந்திய முன்னாள் பேட்டிங் கோச் பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போட்டி மூன்று நாட்களில் முடிவடைந்து விட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இருக்கும் பொழுதும், அதே சமயத்தில் இரு பக்கத்திலும் அனுபவம் மற்ற பேட்டிங் யூனிட் இருக்கும் பொழுதிலும் இப்படியான விஷயங்கள் நடக்க செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -