12/4 சரிந்த தெ.ஆ.. 2 வருடம் காத்திருந்து பழிதீர்த்த டேவிட் மில்லர்.. நெதர்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
477
Miller

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் டி பிரிவில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய பரபரப்பான போட்டி நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் டேவிட் மில்லர் தனி ஆளாக தென் ஆப்பிரிக்க அணியை வெல்ல வைத்தார்.

தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வழக்கம்போல் இந்த மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிப்பது பெரிய கஷ்டமாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

இறுதியாக நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணியின் சைபரண்ட் ஏங்கல்பிரிச்ட் 45 பந்துகளில் 40 ரன்கள், வான் பீக் 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஒட்டினியல் பார்ட்மேன் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ரீசா ஹென்றிக்ஸ், கேப்டன் எய்டன் மார்க்ரம், ஹென்றி கிளாசன் என 12 ரன்கள் முக்கிய நான்கு விக்கெட்டுகளை அந்த அணி இழந்துவிட்டது. இதற்கு அடுத்து டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுத்தார்கள்.

இந்த ஜோடி 72 பந்தில் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 37 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து மூன்று ஓவர்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 51 பந்தில் 59 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 19 ஓவரில் நான்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தானை இந்த 2 இந்திய வீரர்களே வெளிய அனுப்பிடுவாங்க.. இந்தியா கெத்து டீம் – பாக் பவாத் ஆலம் பேட்டி

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்து அரை இறுதிக்கான வாய்ப்பை தென் ஆப்பிரிக்க அணி இழந்தது. அப்போது களத்தில் டேவிட் மில்லர் போராடி முடியாமல் வெளியேறினார். ஆனால் இந்த முறை டேவிட் மில்லர் இரண்டு வருடம் காத்திருந்து நெதர்லாந்து அணியை பழி தீர்த்து இருக்கிறார்.