பாகிஸ்தானை இந்த 2 இந்திய வீரர்களே வெளிய அனுப்பிடுவாங்க.. இந்தியா கெத்து டீம் – பாக் பவாத் ஆலம் பேட்டி

0
278
Alam

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நாளை நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பவாத் ஆலம் பாகிஸ்தான அணி இந்திய அணியை விட பின்தங்கி இருப்பதாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடிகிறது. பேட்டிங் செய்வதற்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் கூட அந்த அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

மேலும் அமெரிக்க அணியை சிறப்பான பந்து வீச்சு வரிசையை வைத்திருந்த பொழுதிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டத்தை அமெரிக்க அணி அபாரமான முறையில் விளையாடி வென்றது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி தற்பொழுது மனரீதியாகவும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

இது குறித்து பேசி இருக்கும் பவாத் ஆலம் கூறும் பொழுது ” இந்திய அணியில் விராட் கோலி மற்றும் பும்ரா இருவரும் தங்களின் அனுபவம் மற்றும் தரத்தின் மூலமாக வெகு எளிதாக பாகிஸ்தான் அணியிடமிருந்து ஆட்டத்தை எடுத்துச் சென்று விடுவார்கள். ஒரு அணியாக இந்தியா சமநிலைக் கொண்டதாக இருக்கிறது. அவர்களை பாகிஸ்தான் அணி வெல்வது கடினமான ஒன்று.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு மீண்டு வந்திருக்கும் முகமது அமீர், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்ற கேப்டன் பாபர் அசாம் உடன் இணைந்து சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் பந்துவீச்சில் இமாத் வாசிம் காயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சதாப் கான் சிறப்பான முறையில் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி பக்கத்துல கூட பாபர் அசாம் இல்ல.. அதே மாதிரி பாகிஸ்தான் டீமும் கிடையாது – நயன் மோங்கியா விமர்சனம்

ஆனால் இந்தியாவிடம் குல்தீப் யாதவ் இருக்கிறார். மேலும் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் வேகப் பந்துவீச்சில் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் அவர்களின் பந்துவீச்சை மேம்படுத்தினால் மட்டுமே இந்திய அணியை விட சிறப்பாக இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.