இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறந்த தரத்தை காட்டி விட்டார்கள் எனவும், தங்கள் வீரர்கள் சிறந்ததை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம், ரோகித் சர்மா இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார்கள். விராட் கோலியின் அபாரமான பேட்டிங் தொடரை வெல்ல தெரிய உதவியாக அமைந்திருக்கிறது. அவர் இந்த தொடரில் மொத்தம் மூன்று போட்டிகளில் 302 ரன்கள் குவித்திருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுக்குப் பிறகு இந்திய அணி வீரர்களை மண்டியிட வைக்க விரும்பினோம் என்பது போன்ற தொனியில் தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பேசியது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. தற்போது அவர் அது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் போது ” நான் எப்போதும் பணிவாக இருப்பதைப் பற்றி மட்டுமே சிந்திப்பவன். பொதுவாக எந்த விதமான பேச்சாக இருந்தாலும் அது அணியை பற்றிய பேச்சாக இருக்க வேண்டும். பயிற்சியாளர் முன்னிலையில் வரக்கூடாது என்று நினைப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக நான் பேசுபொருளாக மாறிவிட்டேன். நான் பேசிய விதம் பலரும் தங்கள் சொந்த கருத்தை அதில் சேர்க்கும் விதமாக அமைந்துவிட்டது. அப்படி நடந்திருக்கக் கூடாது”
“உலகின் சிறந்த வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை எங்களுடைய இளம் வீரர்கள் நேரில் பார்த்தார்கள். விராட் கோலியின் ரோகித் சர்மாவும் தேவையான தரத்தை காட்டினார்கள். இது நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஒரு அனுபவமாக எங்களுக்கு அமைந்தது”
இதையும் படிங்க : டெஸ்ட்ல தோத்தப்ப நடந்தது கடவுளுக்கு தெரியும்.. ஐபிஎல் முதலாளி கூட என்னை விமர்சித்தார் – கம்பீர் வேதனை
“எங்களுக்கு இந்திய அணியின் மீது அழுத்தத்தை கொடுக்க மூன்றாவது ஒருநாள் போட்டியில் நிறைய ஸ்கோர் தேவைப்பட்டது. இந்திய அணிக்கு எதிராக நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் போது அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வைத்து விடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.