இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தன் மீது வரும் விமர்சனங்கள் எல்லாமே கிரிக்கெட் உடன் தொடர்பு கொண்டவை இல்லை எனவும், தனிப்பட்ட ரீதியானது எனவும் அதிரடியாகக் கூறியிருக்கிறார்.
இந்திய அணி கம்பீர் தலைமையில் சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக கம்பீர் பயிற்சியின் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியில் வைக்கப்பட்டு வந்தது.
ஐபிஎல் உரிமையாளர் விமர்சனம்
இந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இழந்ததும் விமர்சனங்கள் முன்னாள் வீரர்களிடமிருந்து கடுமையாக வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஐபிஎல் டெல்லி கேப்பிட்டல் அணியின் உரிமையாளர் பார்த் ஜின்டால் டெஸ்ட் அணிக்கு மட்டும் வேறொரு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இதுகுறித்து அவர் செய்திருந்த ட்வீட்டில் “போட்டி நெருக்கமாக கூட இல்லை, சொந்த மண்ணில் எப்படியானதொரு முழுமையான தோல்வி! நமது இந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் இவ்வளவு பலவீனமாக இருந்து பார்த்ததாக நினைவில்லை. சிவப்பு பந்து கிரிக்கெட் நிபுணர்களை நாம் தேர்வு செய்யாவிட்டால், இதுதான் நடக்கும். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் நாம் கொண்டிருக்கும் ஆழத்தை பார்க்கும் பொழுது, இந்த அணி அதற்கு அருகில் கூட இல்லை. எனவே இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு தனி பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய காலம் இது!” என்று கூறியிருந்தார்.
கடவுளுக்கு தெரியும்
நேற்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டார். அதில் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து அதிரடியான முறையில் கருத்து தெரிவித்திருக்கிறார். இதில் பார்த் ஜின்டால் குறித்தும் மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஒரே ஒரு ரன்னில் ரோகித்தை தாண்டி விராட் சாதனை.. மேலும் சச்சின் ஜெயசூர்யா ரெக்கார்டுகள் காலி – முழு விபரங்கள்
இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த பொழுது என்ன பேசப்பட்டது என்பது கடவுளுக்கு தெரியும். அவற்றில் பாதி கூட கிரிக்கெட் உடன் தொடர்பு கொண்டவை கிடையாது. ஐபிஎல் அணி உரிமையாளர் கூட இரண்டு பயிற்சியாளர்கள் வைப்பது பற்றி எழுதினார். நான் வேறொரு விஷயங்களில் தலையிடுவது கிடையாது. அதேபோல மற்றவர்களும் செய்யக்கூடாது” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.






