109 ரன்.. தென் ஆப்பிரிக்கா வெற்றி.. ஒரே நாளில் இறங்கிய ஆஸி.. WTC புள்ளி பட்டியலில் மாற்றம்.. இலங்கை அணி வெளியேறியது

0
3871
WTC

தென் ஆப்பிரிக்காவின் சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி பெரிய வெற்றி

இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தது. இது தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 317 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணிக்கு ஐந்து விக்கெட் கைவசம் இருக்க வெற்றிக்கு 143 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த நிலையில் இலங்கை அணி கேசவ் மகாராஜ் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்ற 238 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதன் மூலம் 109 ரன்கள் இலங்கை அணியை தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தியது.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் முன்னேற்றம்

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்த வெற்றியின் மூலமாக முதல்முறையாக தென் ஆப்பிரிக்கா அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. நேற்று முதல் இடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா அணி இன்று இரண்டாவது இடத்திற்கு இறங்கி இருக்கிறது. முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி அதே இடத்தில் தொடர்கிறது.

மேலும் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்து தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு போட்டியை வென்றாலும் அந்த அணி 100% உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். எனவே தென் ஆப்பிரிக்க அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் விளையாடுவது ஆஸ்திரேலியாவா அல்லது இந்தியாவா? என்பதுதான் தற்போது கேள்வியாக இருக்கிறது. மேலும் இலங்கையும் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது.

இதையும் படிங்க : 17 பந்து.. 188 ஸ்ட்ரைக் ரேட்.. 6.2 எக்கனாமி.. ஷமி பேட்டிங் பவுலிங் கலக்கல்.. பெங்கால் காலிறுதிக்கு தகுதி.. SMAT 2024

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

தென் ஆப்பிரிக்கா – 63.33
ஆஸ்திரேலியா – 60.71
இந்தியா – 57.29
இலங்கை – 45.46
இங்கிலாந்து – 45.24
நியூசிலாந்து – 44.23
பாகிஸ்தான் – 33.33
பங்களாதேஷ் – 31.25
வெஸ்ட் இண்டீஸ் – 24.24

- Advertisement -