தற்போது இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடரில் பரபரப்பான போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தி பெங்கால் அணி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்துவீச்சு மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் அதிரடியாக செயல்பட்டு மிக முக்கியமான போட்டியில் தன்னுடைய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
17 பந்து அதிரடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பெங்கால் அணிக்காக துவக்க ஆட்டக்காரர் கரண் லால் 25 பந்தில் 33 ரன்கள், விருதிக் சட்டர்ஜி 12 பந்தில் 28 ரன்கள், பிரமானிக் 24 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அந்த அணி 15 புள்ளி ஒன்று ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் பேட்டிங் வந்த முகமது ஷமி அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 17 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 188 ஸ்ட்ரைக் ரேட்டில் 32 ரன்கள் அடித்து நொறுக்கினார். இறுதியாக பெங்கால் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது.
மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய ஷமி
இதைத் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சண்டிகர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு இருக்கும் அங்கீத் ராஜ்பவா 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் கடைசி இரண்டு பந்தில் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியால் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையும் படிங்க : சச்சின் கிட்ட இருந்து கோலி இந்த விஷயத்தை கத்துக்கணும்.. வேற மாதிரி மாறினார் – ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை
இந்த போட்டியில் பெங்கால் தரப்பில் பந்து வீசிய முகமது ஷமி நான்கு ஓவர்களில் ஒரு ஓவருக்கு 6.2 ரன்கள் மட்டுமே கொடுத்து மொத்தமாக 25 ரன்கள் மட்டுமே தந்தார்.இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் வென்றதால் கால் இறுதிக்கு பெங்கால் அணி தகுதி பெற்றது. எனவே முகமது ஷமி ஆஸ்திரேலியா சென்று மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே விளையாட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பெரிய அளவில் பேசி வருகிறார்கள்.