269 ரன்.. பாபரின் திருவிளையாடல்.. விண்டேஜ் குயிண்டனின் வேற மாதிரி சதம்.. பாகிஸ்தான் பரிதாப தோல்வி

0
14
Babar

நேற்று தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

- Advertisement -

தொடரும் பாபர் சோகம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் பகார் ஜமான் 0, பாபர் அசாம் 11, முகமது ரிஸ்வான் 3 என சொற்ப ரன்னில் அடுத்தடுத்து வெளியேற பாகிஸ்தான் அணி அழுத்தத்தில் சிக்கியது.

இதைத் தொடர்ந்து சல்மான் அலி ஆகா 69 மற்றும் முகமது நவாஸ் 59 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் நன்ரே பர்கர் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

குயின்டன் டி காக் சதம்

இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் லுகான் பிரிட்டோரியஸ் 40 பந்துகளில் 46 ரன்கள், மூன்றாவது இடத்தில் வந்த டோனி டி சோர்ஸி 63 பந்தில் 76 ரன்கள் என சிறப்பான பங்களிப்பை கொடுத்து வெளியேறி தென் ஆப்பிரிக்க வெற்றியை உறுதி செய்தார்கள்.

இதையும் படிங்க : ஆஸி 5வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் செய்ய வேண்டிய 2 விஷயம் – தொடரை வெல்வோமா?

தற்போது மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்து இருக்கும் குயிண்டன் டி காக் அற்புதமாக விளையாடி சதம் அடித்து 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 123 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

- Advertisement -