5 வருடம் முன் தோனி சொன்னது.. திரும்ப அதே வார்த்தையை சொன்ன தென்னாப்பிரிக்கா எல்கர்.. காரணம் என்ன?

0
22409

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 36 ரன்களில் ஆல் அவுட்டான டெஸ்ட் போட்டிக்கு, முதல்முறையாக இந்திய அணி எந்தவித போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் தென்னாப்பிரிக்கா அணியிடம் சரணடைந்துள்ளது.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என்று அத்தனை துறைகளிலும் இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி விராட் கோலியிடம் சென்றது. அதன்பின் இந்திய அணி வெளிநாடுகளிலும் வெற்றிபெற தொடங்கியது.

- Advertisement -

இன்று தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றாலும், 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இந்திய பவுலர்களை பார்த்து தென்னாப்பிரிக்கா அணியே ஆட்டத்தை முடிக்கலாமே என்று பிட்சை காரணமாக கூறி கோரிக்கை வைத்தது. ஆனால் இன்று தென்னாப்பிரிக்கா அணியை ஆல் அவுட் கூட செய்ய தடுமாறியது இந்திய அணி.

டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு எதிரணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றுவது தான் முதல் படி என்று முன்னாள் கேப்டன் தோனி பல்வேறு முறை கூறியுள்ளார். தற்போது அதே வார்த்தைகளை அச்சுபிசுகாமல் தென்னாப்பிரிக்கா அணியின் பொறுப்பு கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார். வெற்றிக்கு பின் டீன் எல்கர் பேசும் போது, என்னுடைய இந்த இன்னிங்ஸ் கொஞ்சம் ஸ்பெஷலானது.

சில நேரங்களில் நாங்கள் செய்த எந்த திட்டங்களும் களத்தில் எதிரொலிக்காது. ஆனால் இன்றைய ஆட்டத்தின் அத்தனை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. பந்தின் மீது கவனத்தை வைத்து நேராக எதிர்கொள்வது தான் நமது பணி. தென்னாப்பிரிக்கா மண்ணில் கொஞ்சம் தாமதமாக ஆடினாலே சிறப்பாக விளையாட முடியும். யான்சன் மற்றும் சோர்சியுடன் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம்.

- Advertisement -

அதேபோல் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற கூடிய திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருக்க வேண்டும். அப்படிதான் நாங்கள் டெஸ்ட் போட்டிகளை வெல்கிறோம். வழக்கம்போல் ரபாடா சிறந்த கிரிக்கெட்டை ஆடினார். பர்கர் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டின் புதிய வெளிச்சமாக வந்துள்ளார். அதேபோல் ப்ரீடோரியாவில் கிரிக்கெட் அல்லது ரக்பியை பார்க்க மக்களுக்கு எந்த உந்துதலும் கொடுக்க தேவையில்லை.

அவர்கள் நிச்சயம் மைதானத்திற்கு வந்து பார்ப்பார்கள். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெல்ல வேண்டுமென்றால் முதல் போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டும். இந்திய அணியை வீழ்த்துவது சாதாரணம் காரியமல்ல. அடுத்த போட்டிக்கு முன்பாக எங்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் எங்களின் ஃபீல்டிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.