தென் ஆப்பிரிக்க அணி அடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்தத் தொடர் 2 அணிகளுக்குமே முக்கியமானது. இந்த நிலையில் நட்சத்திர வீரர் ஒருவர் தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து கழட்டி விடப்பட்டிருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்து இந்திய அணியிடம் கோப்பையை இழந்து அந்த நாட்டு ரசிகர்களை மீண்டும் ஒருமுறை சோகத்தில் தள்ளியது.
தற்போது தென் ஆபிரிக்கா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கும் நிலையில் அதற்கான 16 பேர் கொண்ட அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.
இந்த அணிக்கு கேப்டனாக டெம்பா பவுமா தொடர்கிறார். நட்சத்திர பேட்ஸ்மேன்களில் எய்டன் மார்க்ரம் மட்டுமே இருக்கிறார். மேலும் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடும் விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்டன் தேர்வாகி இருக்கிறார்.
அதே சமயத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்க்கோ யான்சன் இந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்டிருக்கிறார். டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அவர் கோட்டை விட்டது தென் ஆப்பிரிக்க அணி கோப்பையை இழக்க முக்கிய காரணமாக இருந்தது.
இவரை அணியில் சேர்க்காதது குறித்து தெளிவுபடுத்தி இருக்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இவருடைய பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுப்பதற்காகவே இவரை அணியில் சேர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. மற்றபடி இவருடைய பார்ம் காரணமாக இவர் நீக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
இதையும் படிங்க : முதல் போட்டியில் டக் அவுட் ஆனேன்.. ஆனா அந்த லெஜெண்ட் வீரர் சந்தோசமா இருந்தார் – அபிஷேக் சர்மா பேச்சு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு 16 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி :
டெம்பா பவுமா, டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைய்ல் வெர்ரேனே மற்றும் ரியான் ரிக்கெல்டன்