முதல் போட்டியில் டக் அவுட் ஆனேன்.. ஆனா அந்த லெஜெண்ட் வீரர் சந்தோசமா இருந்தார் – அபிஷேக் சர்மா பேச்சு

0
416
Abhishek

இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் அதிரடியாகச் சதம் அடித்தார். இந்த நிலையில் முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆகியிருந்த பொழுது அதற்காக மூத்த இந்திய வீரர் ஒருவர் சந்தோஷமாக தெரிந்தார் என்று கூறி இருக்கிறார்.

இந்திய அணி கடந்த வாரங்களில் ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது. இதற்கு அடுத்து முதல் டி20 தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடியது. ஆனால் முதல் போட்டியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணி தோல்வி அடைந்தது. மேலும் தன்னுடைய அறிமுக போட்டியில் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அதே சமயத்தில் இரண்டாவது போட்டியில் வந்த அவர் வட்டியும் முதலுமாக சேர்த்து கொடுத்தார். தன்னுடைய முதல் ரன்னையை சிக்ஸர் மூலம் அடித்தவர், 50 மற்றும் சதத்தை கடந்த பொழுது சிக்ஸர்கள் அடித்தே கடந்தார். பேட்டிங்கில் எந்த இடத்திலும் அவரிடம் கவலை பயத்தை பார்க்க முடியவில்லை.

மேலும் அவருடைய பயிற்சி குருவாக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் போட்டியில் டக் அவுட் ஆன பிறகு யுவராஜ் சிங் என்ன கூறினார்? என்பது குறித்து அபிஷேக் சர்மா தற்பொழுது தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது “அவருடன் முதல் போட்டிக்கு பிறகு பேசினேன், ஏன் என்று தெரியவில்லை நான் டக் அவுட் ஆகியிருந்த போதும் கூட அவர் மகிழ்ச்சியாகவே தெரிந்தார். இது ஒரு நல்ல தொடக்கம் என்பது போல உணர்ந்தேன். அவர் என்னைக் குறித்து பெருமையாக உணர்கிறார் என்றும் நினைக்கிறேன். என்னுடைய எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணம். கிரிக்கெட் மட்டும் கிடையாது கிரிக்கெட்டுக்கு வெளியிலும் அவர்தான்.

இதையும் படிங்க : 125 கோடி பரிசுத்தொகை.. டீமில் இல்லாத ரிங்கு சிங்குக்கு அடித்த லக்.. பிசிசிஐ எடுத்த சிறப்பான முடிவு

முதல் போட்டியில் டக் அவுட் ஆன பிறகு அடுத்த ஆட்டத்தைப் பற்றி யோசிக்க எங்களுக்கு நேரமில்லாதது பாசிட்டிவாக அமைந்தது. அடுத்த போட்டியில் எனக்கான ஒரு பந்துவீச்சாளர் இருக்கும் பொழுது நான் ரன்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். பந்தை பற்றி பெரிதாக யோசிக்காமல் ருதுராஜ் என்னை அடிக்க சொன்னார். நான் இப்படித்தான் விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -