இந்திய கிரிக்கெட்

யார் என்ன சொன்னாலும்.. விராட் ரோஹித் இதுல ஸ்பெஷலிஸ்ட்.. எனக்கு நம்பிக்கை இருக்கு – கங்குலி ஆதரவு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சமீப காலமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள். சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தடுமாறிய இருவரும் அதற்குப் பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்திய அணி இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயும் வரலாறு காணாத தோல்விகளை சந்தித்தது.

இருப்பினும் இவர்கள் இருவரும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பான சாதனைகளை படைத்து வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்தவுடன் ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அதற்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் கங்குலி சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

எனக்கு நம்பிக்கை உள்ளது

இது குறித்து அவர் தெளிவாக கூறும் போது ” வெள்ளை பந்து கிரிக்கெட்டை பொருத்தவரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் பெரிய கிரிக்கெட் வீரர்கள். தொடரில் துபாய் ஆடுகளங்கள் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். துபாயில் கடந்த உலகக் கோப்பைகளின் போது அவர்கள் இருவரும் மிக சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். விராட் கோலி மற்றும் போது சர்மா ஆகிய இருவருமே சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

இதையும் படிங்க:WTC தொடரில் அதிரடி மாற்றம்.. இந்தியாவின் இங்கிலாந்து டூருக்கு முன் நடக்கும் வேலைகள் – வெளியான தகவல்கள்

வரவிருக்கும் போட்டிகளில் அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள்.
ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு சிறப்பாக அமையாமல் இருக்கலாம். ஆனால் அடுத்த தொடரில் அவர்கள் இருவரும் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார்கள். இந்திய அணி டி20 உலக கோப்பை வென்றது. கடந்த ஒரு நாள் உலக கோப்பையில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. அடுத்த தொடரில் இந்திய அணி விருப்பமான அணிகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் வெள்ளை பந்து தொடர்களில் இந்திய அணி மிகவும் சிறப்பான அணியாக உள்ளது. இந்த தொடரை பொறுத்தவரை அனைத்து அணிகளும் பலமாக உள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பலமாக இருக்கும். துணை கண்டத்தில் விளையாடுவதால் பாகிஸ்தான் அணியும் பலமாக உள்ளது. எனவே எந்த அணி அப்போது சிறப்பாக செயல்படுகிறது என்பதை பார்க்கலாம் ” என கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by