எதிர்பக்கத்தில் யார் வேணா இருக்கலாம்.. ஆனா இப்போ இந்திய அணிதான் ‘கிங்’ ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடும் கங்குலி

0
293

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி இந்திய அணியின் ஆதிக்கம் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் இந்திய அணி விளையாடும் நிலையில் முதல் போட்டியில் வங்கதேச அணியையும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணையையும் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 249 ரன்கள் குவித்த போதிலும், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணியை 205 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் செய்தது.

இதன் மூலமாக குரூப் பி பிரிவில் இந்திய அணி முதல் இடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேலும் நாளை நடைபெற உள்ள முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர் கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே ஐசிசி தொடர்களில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு இந்த முறையும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் தோற்கடித்தது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மீண்டும் நாக் அவுட் சுற்றுக்கு இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி இந்த முறை இந்திய அணி வெற்றி பெறும் என்கிற ரீதியாக ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடும் கருத்துக்களை பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:ரொம்ப பதட்டமா இருந்துச்சு.. அந்த 4 பேர்தான் என்கிட்ட தொடர்ந்து பேசி அமைதி படுத்தினாங்க – வருண் சக்கரவர்த்தி

இதுகுறித்து கங்குலி கூறும்போது “இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. அதற்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் மட்டும் தோல்வியடைந்தது. எதிர்பக்கத்தில் யார் இருந்தாலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணி மிகவும் வலுவான அணியாகும். யாரையும் தோற்கடிக்கும் திறன் தற்போது இருக்கும் இந்திய அணிக்கு உள்ளது” என்று ஆஸ்திரேலியா அணிக்கு சவால் விடும் வகையில் கங்குலி பேசி இருக்கிறார்.

- Advertisement -