இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்த போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
நியூசிலாந்து அணி தோல்வி
இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தாலும் அதற்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சார் பட்டேல் கூட்டணி இந்திய அணியை நல்ல ஸ்கோர் எட்ட உதவியது. ஸ்டேயாஸ் ஐயர் 79 ரன்கள், ஹர்திக் பாண்டியா 45 ரன்கள், அக்சார் பட்டேல் 42 ரன்கள் குவிக்க இந்திய அணி இறுதியாக 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பெரிய ஆபத்தாக அமைந்தார். தொடக்க ஆட்டக்காரர் வில் யங்கை 22 ரன்னில் வெளியேற்றிய அவர், கிலென் பிலிப்ஸ் 12 ரன், பிராஸ் வெல் 2 ரன், சான்ட்னர் 28 ரன், மாட் ஹென்றி 2 ரன் ஆகிய மிடில் வரிசை பேட்ஸ்மேன்களை தனது சுழலில் சிக்க வைத்து ஆல் அவுட் ஆக்கினார். இதனால் நியூசிலாந்து அணி இறுதியில் 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் குவித்தார்.
பதட்டமாக உணர்ந்தேன்
இந்த வெற்றி குறித்து வருண் சக்கரவர்த்தி பேசும்போது “ஆரம்பகட்டங்களில் நான் பதட்டமாக உணர்ந்தேன். இந்திய அணிக்கு எதிராக நான் அதிகமான ஒரு நாள் போட்டிகளில் விளையாடாததால் முதலில் பதட்டமாக உணர்ந்தேன். ஆனால் அதற்குப் பிறகு ஆட்டம் மெதுவாக முன்னேறும் போது நான் நல்ல மனநிலையை அடைந்தேன். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
இதையும் படிங்க:ஐசிசி தொடரில் ஆஸி அணி ரெக்கார்டு என்னனு தெரியும்.. அவங்களுக்கு எதிரா எங்க திட்டம் இதுதான் – ரோகித் சர்மா பேட்டி
என்னை அமைதியாக செயல்பட சொன்னார்கள். நேற்று இரவு ஆட்டம் குறித்து தெரிந்து கொண்டேன். நாட்டுக்காக விளையாட எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் பதட்டமாகவும் இருந்தேன். ஆனால் நீங்கள் ஒரு சரியான இடத்தில் தொடர்ந்து பந்து வீசினால் ஆட்டம் உங்களுக்கு கை கொடுக்கும். குல்தீப், ஜட்டு, அக்சர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. இது எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று வருண் சக்கரவர்த்தி பேசியிருக்கிறார்.