ஆஸ்திரேலிய தொடரில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் விராட் கோலி தான் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை என இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி மூன்றுக்கு ஒன்று என தோல்வி அடைந்தது. இதில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்திருந்த போதும், அதற்கடுத்து பெரிதாக ஏமாற்றம் தந்தார்.
அச்சப்பட்ட ஆஸ்திரேலியா மீடியாக்கள்
ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் விராட் கோலி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் ரன் எடுப்பதை அனுமதிக்க கூடாது என்றும், அப்படி அவர் ஆரம்பத்திலேயே ரன் எடுத்தால் அந்த தொடர் முழுக்க அவர் ஆதிக்கம் செலுத்துவார் என்றும், ஆஸ்திரேலியா அணிக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
இந்த நிலையில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்ததும், ஆஸ்திரேலிய மீடியாக்கள் இனி விராட் கோலியை கட்டுப்படுத்த முடியாது என்றும், ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய தலைவலி ஆரம்பித்துவிட்டது என்றும் எழுதி வந்தார்கள். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கடைசி டெஸ்ட் போட்டி வரை விராட் கோலி ஒரே விதத்தில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
நான் விராட் கோலியிடம் எதிர்பார்த்தேன்
இது குறித்து பேசி இருக்கும் சவுரவ் கங்குலி கூறும் பொழுது “ஆண்கள் கிரிக்கெட்டில் விராட் கோலி எப்பொழுதாவது வரும் ஒரு அரிய வீரர் என்று நான் நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 80 முதல் 100 சதங்கள் அடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. என்னை பொருத்தவரை அவர் உலகம் கண்டிராத வெள்ளைப் பந்து கிரிக்கெட் வீரராக இருக்கலாம்”
இதையும் படிங்க : எழுதி வச்சுக்கோங்க.. ஐபிஎல்ல வரலாறுல எங்க ரிஷப் பண்ட் இத செய்ய போறார் – லக்னோ ஓனர் சஞ்சீவ் கோயங்கா உறுதி
“இந்த நிலையில் அவர் பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு அடுத்தடுத்து அவர் விளையாடிய விதம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த சதத்தை அடித்த பிறகு அவர் தொடர்ந்து பெரிய ரன்கள் எடுப்பார் என்று நான் பெரிய அளவில் எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எல்லா வீரர்களுக்கும் மோசமான காலகட்டம் என்பது உண்டு. அவர் இதிலிருந்து சரியாகி வருவார் என்று நம்புகிறேன். சாம்பியன்ஸ் டிராபியில் அவர் நல்ல முறையில் விளையாடுவார்” என்று கூறி இருக்கிறார்.






