நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் குஜராத் அணி 3 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி குஜராத் அணியின் பயிற்சியாளர் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் குஜராத்
கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்று குஜராத் டைட்டன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்ற இந்த அணியில் சில நட்சத்திர வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு தனது அறிமுக ஆண்டிலேயே முதல் ஐபிஎல் தொடரை வெற்றி வெற்றி வரலாறு படைத்தது. பஞ்சாப், டெல்லி, பெங்களூரு போன்ற அணிகள் 17 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் அவர்களால் இன்னும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.
ஆனால் குஜராத் தனி தனது அறிமுக ஆண்டிலேயே கோப்பையை வென்றது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் என்றாலும், பவுண்டரி லைனில் தொடர்ந்து துறுதுறுவென நடந்து கொண்டிருக்கும் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா குஜராத் அணியின் மூளையாக செயல்பட்டு வருகிறார். முதல் ஆண்டில் ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று அடுத்த ஆண்டிலேயே இறுதிப் போட்டி வரை வந்து சாதனை படைத்தது.
அற்புதமான கிரிக்கெட் உணர்வு உள்ளது.
கடந்த ஆண்டில் சிறிது தடுமாறினாலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விட்டதை பிடிக்கும் முயற்சியாக சிறப்பான வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை வலுவாக கட்டமைத்து மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தி வரும் நிலையில் இளம் வீரர்களை கொண்ட அணியை நெஹ்ரா சிறப்பாக வழி நடத்தி வருவது அந்த அணிக்கு பெரிய உதவியாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க:சிராஜை இனி நிறுத்த முடியாது.. பவுலிங்கில் இந்த டெக்னிக்கல் விஷயத்தை கொண்டு வந்துட்டாரு – அம்பாதி ராயுடு
இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறும் போது “முதல் சீசனில் இருந்தே குஜராத் அணி தங்கள் வேலையை மிகச் சிறப்பாக செய்து வருகிறது. அவர்களின் அணி அமைப்பு மற்றும் அணுகு முறையில் நிறைய கிரிக்கெட் மூளை இருக்கிறது. ஆஷிஷ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராக தனது குணங்களை உண்மையிலேயே அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு மிகவும் அபாரமான விளையாட்டு உணர்வை இருக்கிறது” என்று பாராட்டிப் பேசியிருக்கிறார்.






