நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வீரரான முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெடுகள் கைப்பற்றினார்.
இந்த சூழ்நிலையில் அவரது கம்பேக் குறித்து இந்திய முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
முகமது சிராஜ் அபாரமான பவுலிங்
இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக வாங்கப்பட்ட முகமது சிராஜ் தனது சிறந்த பந்துவீச்சை இதுவரை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 7 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த முகமது சிராஜ் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் அது குறித்து பெரிதாக எதுவும் பேசவில்லை என்றாலும் ஐபிஎல் தொடர் வரை அமைதி காத்தார்.
இந்த சூழ்நிலையில் ஆர் சிபி அணியில் இருந்து குஜராத் அணிக்காக வாங்கப்பட்ட அவர், முதல் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசி போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி மொத்தமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் நிலையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரது முன்னேற்றம் குறித்த இந்திய முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சிராஜ் குறித்து இந்திய முன்னாள் வீரர்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “முகமது சிராஜ் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் வளர்ந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன் அவர் அற்புதமான வீரர் என்று நன்றாகவே தெரியும். இந்திய அணியில் அவர் இடம் பெறாத பிறகு திரும்பி வந்த விதத்தை பார்க்கும்போது மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. அவரது மணிக்கட்டு நிலை மாறி இருந்தது குறித்து நாங்கள் முன்பே பேசி இருந்தோம். இப்போது பந்தை அவர் ரிவர்ஸ் ஸ்விங் அடைவதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
இதையும் படிங்க:13000 ரன்.. டி20யில் முதல் இந்திய வீரராக சாதனை.. கிறிஸ் கெயில் உடன் எலைட் பட்டியலில் இணைந்த விராட் கோலி.. முழு விபரம்
அதை அவர் செய்யக்கூடிய திறன் கொண்ட வீரர். அந்தத் திறமை அவரிடம் அபாரமானதாக உள்ளது. அவர் தற்போது கிரிக்கெட்டை ரசித்து விளையாடுவதை காணலாம். இன்னும் அவருக்கு நல்ல நாட்கள் வரப்போகிறது என்று நினைக்கிறேன். இந்த ஐபிஎல் தொடர் 300 ரன்கள் ஆட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் ஆடுகளத்தில் ஏதாவது ஒன்று இருக்கும் வரை பந்துவீச்சாளர்கள் நல்ல நிலைமையில் இருப்பார்கள். அது பேட்டிங் ஆதிக்கத்தை தடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






