எங்க ஆள கம்பீர் சேர்த்துக்கணும்.. இந்த 3 பிளேயரை நம்பினாதான் ஜெயிக்க முடியும் – கங்குலி அறிவுரை

0
8
Ganguly

இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் தன்னுடைய திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அறிவுரை கூறியிருக்கிறார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் துரத்த முடியாமல் படுதோல்வி அடைந்தது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்ததே தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

- Advertisement -

இந்தியாவின் பலம் மாறுகிறது

இந்திய அணி நிர்வாகம் ஆரம்ப காலகட்டங்களில் முதல் மூன்று நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் கடைசி இரண்டு நாட்களுக்கு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் இருக்கும்படி ஆடுகளங்களை அமைத்து வந்தது. இதனால் பேட்ஸ்மேன் ரன்கள் எடுத்தார்கள் பந்துவீச்சாளர்கள் விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதன் காரணமாக வீரர்கள் அனைவரும் தன்னம்பிக்கை அடைந்தார்கள். தற்போது ஒட்டுமொத்தமாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுவதால் பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கை உடைகிறது. மேலும் சொந்த மண்ணிலேயே இந்திய அணி தோல்வி அடையும் சூழல் உருவாகிறது. இதன் காரணமாக வேகப் பந்துவீச்சாளர்களை நம்ப வேண்டிய புது சூழல் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

கங்குலி அறிவுரை

இந்த நிலையில் சவுரவ் கங்குலியை கம்பீர் வேகப்பந்து வீச்சாளர்களை நம்ப வேண்டும் எனவும், மேலும் தங்களுடைய பெங்கால் அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் முகமது ஷமியை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க : இலங்கை தீக்சனா அவ்வளவு சொல்லியும்.. கம்பீர் திருந்தவே இல்லை – சடகோபன் ரமேஷ் விமர்சனம்

இதுகுறித்து சௌரவ் கங்குலி கூறும் பொழுது ” பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் மீது கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்தியா முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன்கள் சேஸ் செய்திருக்க வேண்டும். கம்பீர் மூன்று நாட்களில் போட்டியை முடிக்க நினைக்காமல் ஐந்து நாட்களும் விளையாடி போட்டியை வெல்ல நினைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -