தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கம்பீர் கேட்டு வாங்கியது மோசமான விஷயம் என சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு தாங்களே இப்படியான ஆடுகளத்தை கேட்டு வாங்கியதாக இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பேட்டிங் செய்ய மிகவும் கடினமான ஆடுகளத்தை வாங்கியது விமர்சனம் ஆகி வருகிறது.
தீக்சனா ஏற்கனவே சொன்னார்
இது குறித்து சடகோபன் ரமேஷ் பேசும்பொழுது ” காலம் செல்ல செல்ல இந்த இளம் அணி கண்டிஷன்களுக்கு பழகிக் கொள்ளும் என்று கூறப்பட்டது. இப்படி இருக்கும் பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆடுகளத்தை ஏன் கம்பீர் கேட்டு வாங்க வேண்டும்? இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாம் தோல்வி அடைந்த பிறகு, இந்தியா பேட்ஸ்மேன்களை சிரமப்படுத்தவே சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தாங்கள் அமைத்ததாக மதிஷா தீக்சனா கூறியிருந்தார்”
“இதற்குப் பின்பு இந்தியாவில் வைத்து இந்திய அணியை நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. இது அனைத்துமே சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணியால் தாக்குபிடிக்க முடியாது என்பதை காட்டுகிறது. இப்படி இருக்கும் பொழுது ஏன் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை வாங்கினார்கள்?”
என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
“கம்பீர் தாங்கள் கேட்ட ஆடுகளத்தை கொடுத்ததாக கூறினார். ஆனால் இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடும் திறமையற்றவர்கள் என்று கூறுவது எந்த வகையிலும் அர்த்தம் கிடையாது. இதை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மேலும் கம்பீர் இந்திய அணி அனுபவம் வாய்ந்தது என்று சொல்லி இருந்தார்”
இதையும் படிங்க : மீண்டும் ரோஹித் சர்மா கேப்டன் ஆக்கப்படுகிறாரா?.. சுவாரஸ்யமான திருப்பங்கள் – முகமது கைஃப் பதில்
” தென் ஆப்பிரிக்க அணியில் இந்தியாவில் குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டி விளையாடியது டெம்பா பவுமா மற்றும் ரபாடா மட்டும்தான். இதில் ரபாடா வெளியில் இருந்தார். இப்படி இருந்தும் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வென்றது. அப்படி என்றால் இந்த இரு அணியில் யாருக்கு அனுபவம் குறைவாக இருந்தது. இந்தியாதான் அனுபவம் குறைந்த அணியாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






