நாசிர் ஹுசைனின் திட்டத்தை முறியடித்தது எப்படி22 ஆண்டுகளுக்குப் பின் ரகசியத்தை வெளியிட்ட சௌரவ் கங்குலி!

0
824

2000 ஆண்டின் துவக்கத்தில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியவர் சவுரவ் கங்குலி . இவரது தலைமையின் கீழ் இந்திய அணி வலுவான அணியாக உருவெடுத்தது .

சூதாட்டப் புகார்களால் சிக்கித் தவித்த இந்திய அணியை இளம் வீரர்களைக் கொண்டு மீண்டும் ஒரு வலுவான அணியாக கட்டி எழுப்பினார் கங்குலி . இவரது தலைமையின் கீழ் தான் சேவாக் யுவராஜ் சிங் ஹர்பஜன் ஜாகிர் கான் முகமது கைஃப் ஆஷிஷ் நெஹரா எம் எஸ் தோனி போன்ற துடிப்பு மிக்க இளைஞர்கள் இந்திய அணிக்கு வந்தார்கள் .

- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் 2002 ஆம் ஆண்டின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது . அந்த சுற்றுப் பயணத்தின் போது தான் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் 326 ரன்கள் சேஸ் செய்து இந்திய அணி மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற உதவினர் .

அந்த சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசிர் ஹுசேன் ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் போது விவாதித்தனர் .

நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0, என்று பின்தங்கிய நிலையில் இருந்தபோது லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது . மேலும் அந்த வெற்றி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்தில் இந்தியா பெரும் வெற்றியாகும் .

- Advertisement -

அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய மூன்று வீரர்களும் சதம் எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .சிறப்பாக ஆடிய சச்சின் டெண்டுல்கர் 193 ரண்களையும் ராகுல் டிராவிட் 148 ரண்களையும் எடுக்க சவுரவ் கங்குலி அதிரடியாக விளையாடி 167 பந்துகளில் 128 ரன்களை குவித்தார் . இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 628 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆகி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .

இந்தப் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த நாசிர் ஹுசைன் பயன்படுத்திய பந்துவீச்சு யுக்திகளை பற்றி தற்போது விமர்சித்து இருந்தார் கங்குலி பசுமையான அந்த ஆடுகளத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ ஃபிலின்டாப்பை ந்து வீச்சிக்கு பயன்படுத்திய நாசிர் ஹுசேன் சவுரவ் கங்குலிக்கு பவுன்சர் பந்துகளை வீசுமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார் . இது பற்றி பேசிய கங்குலி ‘ அந்த மைதானத்தில் பவுன்சர் பந்துகளை ஆடுவது எளிதாக இருந்தது நல்ல லென்த் மற்றும் அதற்கு மேல் வீசப்படும் பந்துகளை ஆடுவது தான் எனக்கு சிரமமாக இருந்தது அதனால் நான் சச்சினிடம் கூறினேன் அவர்கள் போன்சாய் வீசுவது என்றால் தொடர்ந்து வீசட்டும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார் . சௌரவ் கங்குலி சார்ட் பால்களை நன்றாக ஆட மாட்டார் என்று எண்ணி நாசிர் உசேன் வகுத்த திட்டம் அவருக்கு எதிராகவே திரும்பியது என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார் .

இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம் தொடரை சமன் செய்தது இந்தியா . மேலும் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஓவல் டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்ததால் . நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது . முத்தரப்பு தொடரை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரையும் சமன் செய்து வெற்றிகரமான சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது .