டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க அவரது மகன் தான் காரணம் – சௌரவ் கங்குலி கருத்து

0
137
Ganguly and Rahul Dravid Son

இந்திய அணியின் டி20 உலக கோப்பை தொடர் நமீபிய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிப் போட்டிகளுக்குத் கூட தகுதி பெறாமல் வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த தொடர் முடிந்தவுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக விராட் கோலி முன்னமே அறிவித்திருந்தார். அதேபோல கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கிய முன்னாள் இந்திய வீரர் ரவிசாஸ்திரியும் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். கேப்டன் பதவிக்கு ரோகித் தான் அடுத்து வரப் போகிறார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் . ஆனால் புதிய பயிற்சியாளராக யார் வருவார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு பல மாதங்களாகவே இருந்து வந்தது. இந்த சந்தேகத்திற்கான இடையில் சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ கொடுத்தது.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ அமைப்பை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியில் திறம்பட வழிநடத்தி ஒருமுறை உலகக்கோப்பையை வெல்ல துணையாக இருந்தவர் டிராவிட். இந்தியாவின் பல ஆண்டுகாலமாக பெரிய கோப்பைகள் எதுவும் இல்லாததால் டிராவிட்டின் தலைமையின் கீழ் இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

- Advertisement -

டிராவிட்டின் நியமனம் குறித்து பேசிய பிசிசிஐ பிரசிடெண்ட் சவுரவ் கங்குலி நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் டிராவிடின் மகன் தனக்கு போன் செய்ததாகவும் அதில் டிராவிட் மிகவும் கண்டிப்புடன் இருப்பதாகவும் அவரை எங்காவது அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறியதாகவும் கங்குலி கூறியுள்ளார். இதனால் டிராவிட்டின் மகன் இன் பேச்சைக் கேட்டு அவரை இந்திய அணிக்குள் அழைத்துக் கொண்டோம் என்று நகைச்சுவையாக கூறினார் கங்குலி.

இந்திய அணிக்கு அனைத்து சிறப்பான வீரர்கள் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக எந்த விதமான ஐசிசி தொடர்களிலும் செல்ல முடியாததால் ராகுல் டிராவிட்டின் வருகை அந்த கவலையை மாற்றும் என்று ரசிகர்கள் வெகுவாக நம்பி இருக்கின்றனர்.