ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டம் குறித்து மௌனம் கலைத்த சவுரவ் கங்குலி

0
365

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி லீக் தொடரில் இருந்து வெளியேறி விட்டது. மறுபக்கம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த இரு அணியிலும் இரண்டு முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மிக சுமாராக நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர்.13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 236 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 19.67 மட்டுமே. மறுபக்கம் ரோஹித் ஷர்மா 12 போட்டிகளில் விளையாடி 218 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 18.17 மட்டுமே.

- Advertisement -

விராட் கோலி ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய தொடர் இந்த ஆண்டு மட்டுமே. கடந்த ஆண்டுகளில் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு மிக குறைவான ரன்கள் குவித்திருக்கிறார், அதேசமயம் பல முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அதேபோல ரோஹித் ஷர்மாவும் மிக சுமாராக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். இதுவரை ஒரு அரைசதம் கூட அவர் குவிக்கவில்லை.

அவர்களுடைய தற்போதைய ஃபார்ம் குறித்து கவலை இல்லை

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இருப்பதால் இவர்கள் இருவரது ஃபார்ம் பற்றிய பயம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றது. அவர்கள் இருவர் குறித்தும் பிசிசிஐ தலைவரானார் சௌரவ் கங்குலி ஒரு சில விஷயங்களை தற்பொழுது பேசியிருக்கிறார்.

- Advertisement -

“அவர்களுடைய தற்பொழுதைய ஃபார்ம் குறித்து எனக்கு எந்த வித பயமும் இல்லை. அவர்கள் இருவரும் இந்தியாவின் சிறந்த வீரர்கள். ஐசிசி உலக கோப்பை தொடர் நடைபெற இன்னும் நிறைய மாதங்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் கூடிய விரைவில் அவர்கள் தங்களுடைய பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டும். கூடிய விரைவில் அவர்கள் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு”, என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை டி20 தொடர்வதற்கு முன்னர் இந்திய அணி ஜூன் மாதத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 t20 போட்டிகள் கொண்ட தொடரிலும், பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது.

அதன் பின்னர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கின்றது. அதுபோக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும்(தேதி முடிவு செய்யப்படாத) இந்திய அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.