மகளிர் ஐ.பி.எல் தொடர் எப்போது என்பதைக் குறித்து கங்குலி வெளிட்டுள்ள செய்தி

0
194
Womens IPL

ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மெகா ஏலமாக இது நடைபெற உள்ளதால் இது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பலருக்கு இதன் மீது சுவாரசியம் தொற்றிக்கொண்டது. ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்து இருந்தது. எந்த வீரர்களை எல்லாம் தக்க வைத்து உள்ளோம் என்ற பட்டியலை ஏற்கனவே 8 அணிகளும் அறிவித்துவிட்டன.

புதிதாக இணைந்த இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்னதாகவே ஒப்பந்தம் செய்துகொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்து இருந்தது. அதையும் இரண்டு அணிகளும் அறிவித்துவிட்டன. தற்போது மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஏலத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆண்கள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் போலவே பெண்கள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரையும் நடத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் தேவையான வீரர்கள் இல்லை என்றும் அதன் காரணமாக மகளிர் ஐபிஎல் தொடரை நடத்துவது தாமதமாகிறது என்று கூறிவந்தார் கங்குலி. ஆனால் பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு மகளிர் கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் தொடரை மகளிருக்கு என பிரத்தியேகமாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இது போன்ற தொடர்களை நடத்த நிதி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் வராது என்றும் கூறிவந்தனர்.

இந்த முறை ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பெண்களுக்கான ஐபிஎல் போன்ற சிறிய தொடர் ஒன்று நடத்தப்படும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். சிறிது நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிக மகளிர் கிரிக்கெட் வீரர்கள் வந்தவுடன் ஆண்களை போலவே பெண்களுக்கும் வைத்து நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார் கங்குலி. ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் போலவே முழு நீளமான ஐபிஎல் தொடர் பெண்களுக்கும் நடத்தப்படும் என்று தற்போது உறுதி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மகளிருக்கும் ஆண்களுக்கு நடப்பது போலவே ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடைபெற்றால், பெண்கள் கிரிக்கெட்டுக்கும் உலக அளவில் நல்ல செல்வாக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -