அஸ்வின், ஜடேஜா கூட தேவையில்ல.. இந்த ஸ்பின்னரை உலககோப்பைக்கு தயார் செய்யுங்க.. கங்குலி அறிவுரை

0
985

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் தான் இருக்கிறது. இதற்காக அணியை தயார் செய்யும் பணியில் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஈடுபட்டு வருகிறது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பு ஆசிய கோப்பை ஆஸ்திரேலியா அணியுடன் தொடர் என அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதனை வைத்து 11 பேர் கொண்ட சிறந்த அணியை தயார் செய்யலாம் என இந்தியா நினைக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி நிர்வாகத்திற்கு முன்னாள் கேப்டன் கங்குலி சில யோசனைகளை தெரிவித்திருக்கிறார். அது என்ன என்று தற்போது பார்க்கலாம். உலக கோப்பையில் வெற்றி பெற இந்திய அணி லெக் ஸ்பின்னரின் தயவு பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால் சாகல் போன்ற வீரர் பெரிய தொடர்களில் தொடர்ந்து பங்கேற்பதில்லை.

டி20 மற்றும் 50 ஓவர் ஒருநாள் போட்டியில் சாஹல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சாகல் மீது நீங்கள் ஒரு கண்ணை வையுங்கள். அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடும் போது லெக் ஸ்பின்னர் நிச்சயம் வேண்டும்.

2011 ஆம் ஆண்டு தோனி, சாவ்லாவை சேர்த்து அந்தப் பணியை செய்தார். இதேபோன்று 2007 ஆம் ஆண்டு நாங்கள் தென்னாப்பிரிக்கா சென்ற போது லெக் ஸ்பின்னர் அணியில் வைத்திருந்தோம். இந்தியா போன்ற ஆடுகளங்களில் லெக் ஸ்பின்னர் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கங்குலி கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வரும் அக்டோபர் எட்டாம் தேதி எதிர்கொள்கிறது. ஒரு சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜா கண்டிப்பாக அணியில் இருக்கும் நிலையில் இரண்டாவது சூழல் பந்துவீச்சாளராக லெக் ஸ்பினரை சேர்க்க வேண்டும் என கங்குலி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் டிராவிடும் இரண்டாவது ஸ்பின்னர் ஆக ஆல்ரவுண்ட் அக்சர் பட்டேலை சேர்க்க முயற்சி செய்து வருகிறார்கள். இதனை தெரிந்து கங்குலி இப்படி ஒரு ஐடியாவை கொடுத்து இருக்கிறார்.