வரலாற்றில் முதல் முறை.. இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒளிபரப்பில் மாற்றம்.. எந்த சேனலில் பார்க்கலாம்?

0
2248
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் இருபதாம் தேதி துவங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒளிபரப்புவதில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கும் இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் ஜூன் இருபதாம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இரு அணிகளுக்கும் நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் தொடர் என்பதால் வெற்றி பெற வேண்டியது மிகக் கட்டாயமானதாக அமைகிறது.

- Advertisement -

இயல்பான ஒளிபரப்பு உரிமை

பொதுவாக ஒரு தொடர் அல்லது ஒரு நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்புவதற்கு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் உரிமம் பெறும் பொழுது, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டலில் அதாவது ஆன்லைனில் என இரண்டிலும் ஒரே நிறுவனமே ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கும்.

இந்த வகையில் இங்கிலாந்தில் விளையாடப்படும் எல்லா கிரிக்கெட் தொடர்களையும் ஒளிபரப்பும் உரிமையை sony நெட்வொர்க் நிறுவனம் சில ஆண்டுகளுக்குப் பெற்று இருக்கிறது. இந்த வகையில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளம் இரண்டிலும் இந்தியா இங்கிலாந்து விளையாடும் டெஸ்ட் தொடர் சோனி நெட்வொர்க்கில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது.

- Advertisement -

ஒளிபரப்பு வரலாற்றில் முதல் முறை

இந்த நிலையில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சோனி நெட்வொர்க் முதல் முறையாக இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரை டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பும் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொடுத்து இருக்கிறது. சோனி நெட்வொர்க்குக்கு சிறந்த டிஜிட்டல் தளம் இருந்த பொழுதும் கூட இந்த பகிர்வு நடந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இதையும் படிங்க : கில்லுக்கு கேப்டன் பதவி.. காரணம் கம்பீர் கிடையாது.. இந்த நட்சத்திர முன்னாள் வீரர்தான் – உடைந்த உண்மை

இதைத்தொடர்ந்து நடைபெற இருக்கின்ற இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தொலைக்காட்சியில் சோனி நெட்வொர்க்கிலும், ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்திலும் அதாவது ஆன்லைனில், மொபைல் மற்றும் சிறப்பு தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டார் இந்திய கிரிக்கெட் ஒளிபரப்பு துறையில் அடுத்த கட்ட பார்ச்சலை துவங்கி இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்!

- Advertisement -