இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி சுப்மன் கில்லுக்கு கிடைப்பதற்கு முக்கிய காரணம் கம்பீர் கிடையாது எனவும் முன்னாள் இந்திய வீரர் ஒருவர்தான் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டன் ஆகவும் ரிஷப் பண்ட் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டார்கள்.
ஷிகர் தவான் – சுப்மன் கில்
2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அந்த நேரத்தில் இந்திய ஒரு நாள் அணிக்கு ஷிகர் தவான் தற்காலிக கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது ரோகித் சர்மாவின் இடத்திற்கு சுப்மன் கில் தற்காலிகமாக துவக்க வீரராக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இறுதியாக 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அதிரடியாக ஷிகர் தவான் நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா உடன் சுப்மன் கில் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். இந்த அளவிற்கு கில்லுக்கு சர்வதேச கிரிக்கெட் மிக வேகமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்னணியில் இருந்தவர்தான் தற்பொழுது கேப்டன் பதவிக்கும் பின்னணியில் இருந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இவர்தான் முக்கிய காரணம்
இது குறித்து பிசிசிஐ தரப்பில் பெயரிடப்படாமல் பேசிய அதிகாரி “இந்திய அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிகளில் கில் ராகுல் டிராவிட் பயிற்சி என் கீழ் செயல்பட்டார். மேலும் அவர் இந்திய அணிகளும் ராகுல் டிராவிட் பயிற்சியில் விளையாடி இருக்கிறார். எனவே நாங்கள் அவரை தொடர்பு கொண்டு கில் தலைமைத்துவம் பற்றி விசாரித்தோம். அவர் கில் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்று எங்களிடம் கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய பசங்களுக்கு பயமே கிடையாது.. இங்கிலாந்துல அசத்துவாங்க.. ஆனா இத செய்யணும் – ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை
2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல கில் முக்கிய காரணமாக இருந்தார். அதே ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் கில்லை ராகுல் டிராவிட் கொண்டு வந்தார். மேலும் அவருடைய பயிற்சியில்தான் இந்திய அணியிலும் கில்லுக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. கேர்ள் உடைய கிரிக்கெட் வளர்ச்சியில் ரகசியமாக ராகுல் டிராவிட் மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது!






