“சில நேரங்களில் உங்களின் பலமே பலவீனமாக அமைந்து விடும்” – விராட் கோலியின் ஆட்டம் இழப்பு பற்றி அவரது பயிற்சியாளர் கருத்து!

0
129

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை இந்தியா ஐந்து விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பத்தி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாளை சென்னையில் வைத்து நடைபெற இருக்கிறது . இரண்டு அணிகளும் 1-1 வெற்றி பெற்று தொடரானது சம நிலையில் இருப்பதால் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற இரண்டு அணிகளுமே முனைப்பு காட்டும்.

- Advertisement -

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. விராட் கோலி மற்றும் அக்சர் பட்டேல் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியான தொடக்கத்தை கூட அமைக்கவில்லை. விராட் கோலி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில் 31 ரன்களில் எல்லிஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். விராட் கோலி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளிலும் ஒரே முறையில் ஆட்டம் இழப்பது மிகவும் அரிது. ஆனால் இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். தற்போது இது குறித்து பேசி இருக்கிறார் விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா.

இந்தியன் நியூஸ் ஸ்போர்ட்ஸ் சேனல் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “ஃபிளிக் ஷாட் விராட் கோலி வழமையாக ஆடும் ஷாட்களில் ஒன்று. விராட் கோலி இரண்டு முறை ஒரே மாதிரியாக ஆட்டம் இழப்பது தற்போது நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் தன்னுடைய இன்னிங்ஸை கட்டமைக்க கூடிய நேரத்தில் ஆட்டம் இழந்தார். கடினமான துவக்கத்தை கடந்து வந்த பின் அவர் ஆட்டம் இழந்தது துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டார் ராஜ்குமார் சர்மா ..

இதுபற்றி அந்த பேட்டியில் பேசிய ராஜ்குமார் சர்மா” விராட் கோலி சிறப்பான பந்து வீச்சில் அவுட் ஆனார். இந்த குறிப்பிட்ட ஷாட்டை விளையாடும்போது அவர் அவுட் ஆவதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது . அது அவருக்கு வளமையான ஷாட்.
மற்றும் அவர் ஃபிளிக் மூலம் நிறைய ரன்கள் எடுத்தார். ஆயினும் இரண்டு போட்டிகளிலும் அவர் ஒரே முறையில் ஆட்டம் இழந்தார்” என குறிப்பிட்டார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய சர்மா ” இரண்டாவது போட்டியில் விராட் கோலி நன்றாக பேட்டிங் செய்தார்.ஸ்டார்க் மற்றும் கிரீன் வீசிய ஆரம்ப ஓவர்களை சிறப்பாக ஆடிய அவர் எல்லிஸின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தது துரதிஷ்டவசமானது. அவர் இரண்டு முறையும் ஒரே மாதிரியாகவே ஆட்டம் இழப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். சில நேரங்களில் நமது மிகப் பெரிய பலம் கூட பலகீனமாக மாறலாம்”என தெரிவித்தார். மேலும் விராட் கோலியின் நிச்சயமாக மூன்றாவது போட்டியில் மிகப்பெரிய ரண்களுடன் இந்தத் தொடரை நிறைவு செய்வார் என கூறி முடித்தார் ராஜ்குமார் சர்மா.