ஏதோ இருக்கு விசாரணை தேவை.. கிரவுண்ட்ஸ் மேனுக்கு காசு கொடுத்த சிராஜ்,ACC.. அர்ஜுனா ரனதுங்கா சரமாரி கேள்வி.!

0
11214

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடந்து முடிந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் தனக்கு கிடைத்த 5000 அமெரிக்க டாலர்களை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தின் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

- Advertisement -

மேலும் பரிசளிப்பு விழாவின் போது பேசிய அவர் ஆடுகள பராமரிப்பாளர்களின் கடினமான உழைப்பால் தான் ஆசிய கோப்பை தொடர் வெற்றிகரமாக முடிவுற்றது என பாராட்டி பேசி இருந்தார். மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாகவும் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு அன்பளிப்பாக 50,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது. முகமது சிராஜ் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த நடவடிக்கையை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் இலங்கை அணிக்காக உலக கோப்பையை வென்ற அர்ஜுனா ரனதுங்கா நடந்து முடிந்த 16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பரபரப்பான கருத்தை தெரிவித்திருக்கிறார். இதுவரை எத்தனையோ போட்டிகள் இலங்கையில் நடைபெற்று இருந்தோம் அப்போதெல்லாம் மழை பெய்த போதும் ஆடுகளம் பராமரிப்பாளர்களுக்கு பண உதவி செய்யாதவர்கள் இப்போது ஏன் செய்தார்கள்.? என கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

இது தொடர்பாக பேசி இருக்கும் அவர்” இந்திய அணி எத்தனையோ முறை இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் சில கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. சில கிரிக்கெட் போட்டிகள் ஆடுகள பராமரிப்பாளர்களின் கடின உழைப்பினால் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்கு பண உதவி செய்யாத நிர்வாகம் இப்போது மட்டும் ஏன் செய்திருக்கிறது.? மேலும் ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர் கூட அவரது பரிசுத்தொகையை ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்கு கொடுத்தது ஏன்.? இதுதான் என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி என தெரிவித்திருக்கிறார் ரனதுங்கா.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” ஆடுகள பராமரிப்பாளர்கள் வருடம் முழுவதும் மைதானத்தை பராமரிக்க தங்களது கடுமையான உழைப்பை கொடுத்து வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் கூட இது போன்ற ஒரு வெகுமதியை கொடுத்ததில்லை. இது தொடர்பாக மீடியாக்கள் விசாரணை நடத்த வேண்டும்” என தனது பேட்டியின் போது தெரிவித்திருக்கிறார் அர்ஜுனா ரனதுங்கா.

அர்ஜுனர் ரனதுங்கா பேட்டியில் இருந்து அவர், ஆடுகளம் பராமரிப்பாளர்கள் இந்திய அணிக்கு சாதகமாக ஆடுகளங்களை வடிவமைத்தனர் என்று மறைமுகமாக கூறுவது போல இருப்பதாக பல கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து இருக்கின்றனர் . எனினும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர்கள் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தால் இந்திய அணிதான் முதலில் பேட்டிங் செய்திருக்கும்.