“டாப்-3ல ஒருத்தர் சதம் அடிப்பாங்கன்னு விராட் கோலி சொன்னார்; நீ தான் அடிப்ப பாருன்னு நான் சொன்னேன்” – டு ப்ளசிஸ் பேட்டியில் தெரியவந்த ட்ரெஸ்ஸிங் ரூம் சீக்ரெட்!

0
306

டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து பேட்டிங் வருவதற்கு முன்பு, ‘இன்று நீ சதம் அடிப்பாய்!’ என்று விராட் கோலியிடம் கூறினேன். அதன்படியே நடந்து விட்டதுஎன உள்ளே பேசிக்கொண்டதை பேட்டியின் போது கூறியுள்ளார் டு பிளசிஸ்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கட்டாயம் வென்றாக வேண்டிய லீக் போட்டியில் ஆர்சிபி அணி விளையாடியது. ஹைதராபாத் அணிக்கு ஹென்ரிச் கிலாசன் சதம் விளாசினார். இறுதியாக, 20 ஓவர்களில் 186 ரன்கள் அடித்தது ஹைதராபாத் அணி.

- Advertisement -

187 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் ஓபனிங் இறங்கி ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் விளாசியது.

விராட் கோலி இந்த சீசனின் முதல் சதத்தை அடித்தார். ஒட்டுமொத்தமாக இவர் அடிக்கும் ஆறாவது ஐபிஎல் சதம் இதுவாகும். டு பிளசிஸ் 71 ரன்கள் அடித்து அவுட் ஆனார். விராட் கோலி சதம் அடித்த அடுத்த பந்தியிலேயே ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியாக ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலிலும் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. அதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி ஆகிவிடும் என்கிற நிலையிலும் இருக்கிறது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய ஆர்சிபி அணியின் நாயகர்கள் விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் போட்டி முடிந்த பிறகு உரையாடலில் ஈடுபட்டனர். அப்போது டு பிளசிஸ் பேசுகையில், “ட்ரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி இன்று சதம் அடிப்பார் என்று ஒருவர் கூறினாரே! தெரியுமா?” என கிண்டலாக கேட்டார். ஏனெனில் அந்த கணிப்பை சொன்னதே டு பிளசிஸ் தான்.

இருவருக்கும் நடுவில் என்ன உரையாடல் நடந்தது என்று விராட் கோலி கூறுகையில் , “நாங்கள் இருவரும் ஓப்பனிங் இறங்குவதற்கு முன்பு, எங்களுக்குள் நடந்த உரையாடலில் டு பிளசிஸ் என்னிடம் ‘இன்று டாப் 3 பேட்ஸ்மேன்களில் ஒருவர் சதம் அடிப்பார் என உள்ளுணர்வில் தோன்றுகிறது’ என்றார். உடனடியாக, ‘இந்த சீசன் முழுவதும் ஃபார்மில் இருப்பது நீதான். நீ சதம் அடிப்பாய்!.’ என நான் சொன்னேன். அதற்கு மறுப்பு தெரிவித்து, ‘இன்று நீ சதம் அடிக்கப் போகிறாய்!’ என டு பிளசிஸ் சொன்னார்”. என்று விராட் கோலி வெளிப்படுத்தினார்.