என்னைவிட ஒருவர் சிறப்பாக செய்ததால்தான் உள்ளே இருக்கிறார்; நான் வெளியே இருக்கிறேன் – ஷிகர் தவான் உருக்கமான பேச்சு!

0
356
Shikar Dhawan

உலக கிரிக்கெட்டில் குறிப்பாக இந்தியக் கிரிக்கெட்டில் மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு வீரர் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் இடது கை துவக்க ஆட்டக்காரர் டெல்லியைச் சேர்ந்த சிகர் தவான்தான்!

இந்திய டெஸ்ட் அணியில் சராசரி 40 ரன்கள் இருக்கும்பொழுது அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஏழு எட்டு வருடங்களாக 400,500, 600 என ரன்களை குவித்து வந்த பொழுதும் இந்திய டி20 அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். இந்தியாவில் நடக்க இருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் துவக்க வீரராக கட்டாயம் இடம் பெறுவார் என்று இருந்த நிலையில், தற்பொழுது அந்த அணியில் இருந்தும் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஒவ்வொரு முறை இது அவருக்கு நடக்கும் பொழுதும் அதற்கு அவருடைய பதில் அவ்வளவு முதிர்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும். தற்பொழுது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷிகர் தவான் தற்பொழுது ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும் வழக்கமான அதே முறையில் பேசி இருக்கிறார்!

ஷிகர் தவான் கூறும்பொழுது “ஏற்றத்தாழ்வுகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். காலப்போக்கில் அனுபவத்துடன் அவற்றை எவ்வாறு கையாள்வது என நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். நான் அவற்றிலிருந்து நிறைய வலிமையை பெறுகிறேன். நான் என்னால் முடிந்ததை செய்தேன். யாராவது என்னைவிட சிறப்பாக செய்தால் நல்ல விஷயம். அப்படி சிறப்பாக செய்த காரணத்தால் தான் ஒருவர் இந்திய அணிக்குள் இருக்கிறார். நான் அங்கு இல்லாமல் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் எங்கிருந்தாலும் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். எனது செயல்முறை மிகவும் வலுவாக இருப்பதை உறுதி செய்கிறேன். இந்திய அணிக்குள் வருவதற்கான வாய்ப்பு எனக்கு எப்போதும் இருக்கிறது. அந்த வாய்ப்பு வந்தால் நல்லது வராவிட்டாலும் நல்லது. நான் நிறைய சாதித்துள்ளேன் நான் அதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரவேண்டியது கட்டாயம் வரும் நான் அதில் எதுவும் விரக்தி அடையவில்லை ” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் ஐபிஎல் குறித்து தொடர்ந்து பேசிய அவர் ” எனது ஐபிஎல் தயாரிப்பு மிக நன்றாக நடைபெற்று வருகிறது. நான் பெங்களூரில் சமீபத்தில் பத்து நாட்கள் இருந்தேன் அங்கு எனது உடல் தகுதியில் கவனம் செலுத்தப்பட்டது. ஐபிஎல் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி துவங்க இருக்கும் எங்கள் அணி முகாமில் கலந்து கொள்வேன். பின்னர் நாங்கள் அங்கிருந்து மீண்டும் ஒரு குழுவாகி செல்வோம். நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன். அணியை முன்னிருந்து வழிநடத்த ஆவலுடன் இருக்கிறேன்” என்று நம்பிக்கையாக உற்சாகமாக கூறியிருக்கிறார்!