“எப்படியோ அதை கண்டுபிடிச்சிட்டாங்க!” முதல் முறையாக ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டிய ஹர்பஜன் சிங்!

0
5437
Harbajan

நேற்று ஆஸ்திரேலியா அணியை பந்துவீச்சில் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்திய இந்திய அணி, பேட்டிங்கில் ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்து அதிர்ச்சி அளித்தது.

மேலும் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சு திட்டத்தை வகுத்த இந்திய அணி நிர்வாகம், சுழற் பந்துவீச்சு வியூகத்தை முன்வைத்து, இந்திய அணியின் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களையும் விளையாடும் அணிக்குள் கொண்டு வந்தது.

- Advertisement -

இதற்கு கைமேல் பலனாக நேற்று இந்த மூவரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவின் ஆறு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார்கள். போட்டியின் முக்கியமான மிடில் ஓவர்களை இவர்கள் மூவரும் அற்புதமாக பாதுகாத்து கேப்டனுக்கு மகிழ்ச்சி தந்தார்கள்.

அதே சமயத்தில் பேட்டிகள் திரும்பி வந்த பொழுது இந்திய டாப் ஆர்டர் திடீரென சரிந்தது. இந்த நிலையில் கடந்த மாதத்திலிருந்து ஆச்சரியப்படுத்தும் விதமாக விளையாடி வரும் கேஎல்.ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை தோல்வியிலிருந்து காத்தார். நேற்றைய போட்டி இந்திய அணிக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கக்கூடிய போட்டியாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ” கேஎல்.ராகுல் அற்புதமாக விளையாடினார். யுவராஜ் சிங்குக்கு பிறகு நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் விளையாடும் ஒருவரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அவருக்கு சிங்கிள் மற்றும் டூ ரன்களை எப்படி எடுப்பது என்றும், எப்போது பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்றும் எப்படி ஆட்டத்தை மாற்ற வேண்டும்? என்றும் நன்றாகத் தெரியும்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா சரியான வேகத்தில் பந்தை வீசினார். மேலும் அவர் சீம் நிலையும் மிகச் சிறப்பாக இருந்தது. ஸ்மித்தை அவர் வெளியேற்றிய பந்து அந்த ஆட்டத்தின் மிகச்சிறந்த பந்தாக அமைந்தது.

இந்தியாவின் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுமே மிகச்சிறப்பாக பந்து வீசினார்கள். இந்தியாவின் மெதுவான பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிப்பது என்று ஆஸ்திரேலியாவுக்கு தெரியவில்லை.

ஜடேஜா சென்னையில் மேஜிக் செய்யக்கூடியவர். சென்னையில் அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். சென்னையில் அவரது சாதனையை எடுத்துப் பார்த்தால், அவர் எப்பொழுதும் கிட்டத்தட்ட போட்டிக்கு மூன்று நான்கு விக்கெட்டுகளை கைப்பற்ற கூடியவராக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!