“என்னை எப்படியாவது சிஎஸ்கே வாங்கிடனும்.. காரணம் இதுதான்!” – ஜெரால்ட் கோட்சி உருக்கமான பேச்சு!

0
1896
Coetzee

2014 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று துபாயில் நடத்தப்பட இருக்கிறது. மெகா ஏலம் முடிந்து இரண்டாவது வருட மினி ஏலம் என்கின்ற காரணத்தினால், முக்கிய வீரர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹெட், ஜோஸ் இங்லீஷ், நியூசிலாந்தின் டேரில் மிட்சல் மற்றும் ரச்சின் ரவீந்தரா, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்சி, இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரு பெரும் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்பொழுது தரமான வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுகிறது. எனவே மேற்கண்ட பட்டியலில் இருக்கும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரையாவது வாங்க அவர்கள் பெரிய ஆர்வம் காட்டுவார்கள்.

அதே சமயத்தில் மற்றுமொரு பெரிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிடில் வரிசையில் பேட்டிங்கில் அம்பதி ராயுடு இடத்திற்கும், 140 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி வீசக்கூடிய ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரும் இப்போதைக்கு தேவையாக இருக்கிறார்கள்.

இந்த இரண்டு அணிகளையும் எடுத்து வைத்து பார்க்கும் பொழுது சென்னை அணியிடம் மும்பை அணியை விட பணம் மிக அதிகமாக சுமார் 30 கோடிக்கு மேல் இருக்கிறது. எனவே அவர்களால் தாங்கள் விரும்பிய படி இரண்டு வீரர்களை வாங்க முடியும் என்பதில் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

ஏன் இந்த இரண்டு அணிகளை மட்டும் பார்க்கிறோம் என்றால், இந்த இரண்டு அணிகளுமே தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்சியை விரும்பக்கூடிய அணிகளாக இருப்பார்கள். ஆனால் ஜெரால்டு கோட்சியின் விருப்பம் வேறாக இருக்கிறது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்.

இதுகுறித்து ஜெரால்ட் கோட்சி கூறும் பொழுது “எம்எஸ்.தோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடினால், எல்லா காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவரான அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும். சூப்பர் கிங்ஸ் குடும்பம் உண்மையிலேயேசிறப்பு வாய்ந்தது. அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் அற்புதமான அணி!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி இருக்கும் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்தமுறை நடைபெற்ற மினி ஏலத்தில், இவரை மிகச் சுலபமாக சென்னையால் வாங்கி இருக்க முடியும். ஆனால் சிசண்டா மகேலாவை வாங்கினார்கள். இந்த நிலையில் தற்பொழுது பெரிய தொகை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது!