இளம் வீரர்கள் வீணாய் போவதற்கு முக்கியக் காரணமே சமூக வலைதளங்கள்தான் -கவுதம் கம்பீர் அதிரடி குற்றச்சாட்டு!

0
194
Gambhir

டெல்லியை சேர்ந்த தற்பொழுது 41 வயதாகி இருக்கும் கவுதம் கம்பீர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இரண்டு முறை இடம் பிடித்தவர். இரண்டு முறையும் மிகச் சிறப்பான ஆட்டத்தை அணிக்காக வெளிப்படுத்தியவர்!

தன் மனதில் தோன்றும் கருத்து எதுவாக இருந்தாலும் அதை ஒளிவு மறைவு என்று எந்த இடத்திலும் வெளிப்படுத்தக்கூடியவர். தற்பொழுது கூட 50 ஓவர் உலகக் கோப்பையை பற்றி பேசும்பொழுது, ஹர்திக் பாண்டியாவை எல்லா நேரத்திலும் நம்ப முடியாது உடனே அவருக்கு ஒரு மாற்று வீரரை ஏற்பாடு செய்யுங்கள் என்று தைரியமாக பேசியவர் இவர்தான்.

- Advertisement -

தற்பொழுது இளம் வீரர்கள் சமூக வலைதளங்களில் எது ஒன்றையும் வெளியிடக்கூடியவர்களாக அதிகம் பயன்படுத்தக்கூடியவர்களாக இருப்பது எப்படியான சிக்கல்களை உருவாக்குகிறது என்று மிக தைரியமாக தன் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
” நண்பர்களே சமூக வலைத்தளங்கள் என்பது குறிப்பாக இந்தியாவில் உங்களைப் போன்ற இளம் வயதினர்களுக்கு ஒரு போலியான விஷயம். என்னை நம்புங்கள் என் காலத்தில் சமூக வலைதளத்தின் பயன்பாடு குறைவாக இருந்ததால்தான் என்னால் அந்த அளவிற்கு சாதிக்க முடிந்தது. இந்த இளம் தலைமுறையை பார்க்கும் பொழுது… இளம் விளையாட்டு வீரர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டு பேசுவோம். அவர்கள் பயிற்சி செய்து திறமையை வளர்ப்பது என்று இல்லாமல் என்ன செய்கிறார்கள். அவர்கள் பயிற்சிக்கே சென்றாலும் அங்குள்ள ஒவ்வொரு விஷயங்களையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடதான் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் அதற்கு எத்தனை விருப்பங்கள் வந்திருக்கிறது அதற்கு பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றுதான் அதிகம் பார்க்கிறார்கள் என்று ” கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நீங்கள் உங்கள் வாழ்க்கையை சரியாக வாழவில்லை. இது சரியான வழி அல்ல. சமூக வலைதளங்களில் பேசக்கூடிய சரி மற்றும் தவறு இரண்டுமே சரியல்ல. என்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் மக்கள் நல்லவிதமாக பேசினாலும் கெட்ட விதமாக பேசினாலும் நான் அது இரண்டையுமே பொருட்படுத்தியது கிடையாது. உங்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஒரு வகையில் வேடிக்கையான விஷயமாக இருக்கலாம். அப்படி என்றால் அங்கு வரும் கருத்துகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் தராதீர்கள். நீங்கள் ஒரு விடுமுறைக்கு சென்றால் அந்த விடுமுறையை சந்தோசமாக உங்களுக்கு பிடித்தவர்களுடன் களியுங்கள். மாறாக அங்கிருந்து புகைப்படங்கள் எடுத்து பதிவு செய்து அதற்கு எத்தனை விருப்பங்கள் வந்துள்ளது என்று பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள் ” என்று தடாலடியாக அடித்திருக்கிறார்!

- Advertisement -